ஆரம்பத்துலேயே சொன்னேன் கேட்கல.. இங்கிலாந்து அணியின் தவறான தேர்வை விளாசிய.. நாசர் ஹுசைன்

- Advertisement -

ஹைதராபாத் நகரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தடுமாறி வருகிறது. குறிப்பாக அதிரடியாக விளையாடுவோம் என்று சொன்ன அந்த அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அடுத்ததாக விளையாடிய இந்தியா ஆரம்பத்தில் அதிரடியாகவும் பின்னர் நிதானமாகவும் விளையாடி 436 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

முன்னதாக இந்தியா என்றாலே அங்கு முதல் நாளிலிருந்தே அனைத்து மைதானங்களும் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதிய இங்கிலாந்து நிர்வாகம் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை ஒரு நாள் முன்பாகவே தைரியமாக அறிவித்து 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்தது. அத்துடன் மார்க் வுட்டை மட்டுமே ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுத்த இங்கிலாந்து தங்களுடைய ஜாம்பவான் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சனை கழற்றி விட்டது அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

தப்பு பண்ணிட்டாங்க:
ஏனெனில் ஒருவேளை ஹைதராபாத் மைதானம் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் போனால் எப்படி வெல்ல முடியும் என இங்கிலாந்து ரசிகர்கள் கவலையடைந்தனர். இறுதியில் ஹைதராபாத் மைதானம் வேகம் மற்றும் சுழல் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்ததை பயன்படுத்தி பும்ரா, ஜடேஜா, அஸ்வின் போன்ற இந்திய வேக மற்றும் ஸ்பின் பவுலர்கள் விக்கெட்டுகளை எடுத்தனர்.

ஆனால் ஏற்கனவே இந்திய மண்ணில் வெற்றிகரமாக செயல்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாததால் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இங்கிலாந்து திணறியது. இந்நிலையில் இப்போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தாம் சொல்லியும் இங்கிலாந்து 3 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்து தவறு செய்ததாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“போட்டி துவங்குவதற்கு முன்பாகவே நான் ஆண்டர்சனை வைத்து விளையாடியிருப்பேன் என்று சொன்னேன். அனைவரும் இங்கே 3 ஸ்பின்னர்கள் வேண்டும் என்று சொன்ன போது அணியின் சமநிலையை நினைத்து நான் ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் ஜோ ரூட்டையும் சேர்த்து நம்மிடம் 4 ஸ்பின்னர்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். சமீப காலங்களில் இந்திய மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருப்பதால் இங்கிலாந்து 3 ஸ்பின்னர்களை விரும்பியது”

இதையும் படிங்க: இத்தனை ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல்முறை – இந்திய வீரர்களால் ஏற்பட்ட அரிதான நிகழ்வு

“ஜேக் லீச் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுகிறார். ரெஹன் மற்றும் ஹர்ட்லி அனுபவமில்லாததால் தடுமாறுவார்கள். அது போன்ற சூழ்நிலையில் உங்களுக்கு ஆண்டர்சன் கட்டுப்பாட்டை கொடுப்பார். அவர் இல்லையென்றால் ஓலி ராபின்சன் போட்டியை கொடுப்பார். இந்திய துணை கண்டத்தில் ஆண்டர்சன் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் உங்களுக்கு தேவையான கட்டர்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை வீசுவார்” என்று கூறினார்.

Advertisement