இந்திய வீரர்களான இவங்க 2 பேரை பாத்து எல்லாரும் விளையாட கத்துக்கணும் – நாசர் உசேன் ஓபன்டாக்

Nasser-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாள் மழையின் காரணமாக மொத்தமாக கைவிடப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

gill

- Advertisement -

மைதானமானது பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்த போதிலும் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை குவித்த இந்த ஜோடியை தற்போது முனனாள் வீரர்கள் பலரும் பாரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் விளையாட்டு சேனல் ஒன்றிர்கு பேட்டியளித்திருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நசீர் உசைன், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள் என்று நானே ட்வீட் செய்யலாம் என்று இருந்தேன். சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிக அற்புதமாக விளையாடி இருக்கிறார்கள் என்று கூறிய அவர் அந்த பேட்டியில் மேலும் பேசியதாவது,

gill 2

இந்த இருவரைத் தவிர்த்துவிட்டு இங்கிலாந்தில் இதற்கு முன்புவரை எந்த இரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் இவ்வளவு சிறப்பாக ஷாட் பிட்ச் பந்துகளை எதிர் கொண்டிருக்கிறார்களா என்று எனக்கு நினைவில் இல்லை. அவ்வளவு அற்புதமாக ஷாட் பிட்ச் பந்துகளை இந்த இருவரும் எதிர்கொண்டு விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக சுப்மன் கில்லின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருடைய இதுபோன்ற ஆட்டம் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கான தொடரில் மிக முக்கியமானதாக அமையப்போகிறது என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

kohli rahane

நேற்று நடைபெற்ற இந்தி இறுதிப் போட்டியின் இரண்டவது நாள் ஆட்டமானது போதிய வெளிச்சமின்மை காரணமாக சீக்கிரமகவே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய அணியானது மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டானான விராட் கோஹ்லி 44 ரன்களுடன், துணைக் கேப்டனான ரஹானே 29 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

Advertisement