இந்தியாவில் இன்னுமா இது நடக்குது? சச்சினையே மிஞ்சி சூர்யவன்சி இதை செஞ்சுருக்காரு.. நாசர் ஹுசைன் வியப்பு

Nasser Hussain
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதை விட குஜராத்துக்கு எதிரான போட்டியில் பல மடங்கு அபாரமாக விளையாடிய அவர் 35 பந்தில் 100 ரன்கள் தொட்டு 101 (38) ரன்கள் அடித்து ராஜஸ்தான் வெற்றியில் பங்காற்றினார்.

அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை சூரியவன்சி படைத்தார். அது போக ஐபிஎல் தொடரில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார். அதனால் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல முன்னாள் இன்னாள் வீரர்களின் பாராட்டுகளையும் அவர் பெற்றார்.

- Advertisement -

இந்தியாவில் இன்னுமா:

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தியதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஆனால் அவரை மிஞ்சும் அளவுக்கு 14 வயதில் சூரியவன்சி அசத்தியுள்ளதாகவும் நாசர் பாராட்டியுள்ளார். அப்படி 15க்கும் குறைவான வயதுக்குள் இருக்கும் வீரர்கள் அசத்துவது இன்னுமா இந்தியாவில் நடக்கிறது? என்றும் அவர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி நாசர் ஹுசைன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “என்னால் நம்ப முடியவில்லை. இது போன்ற விஷயங்கள் இந்தியாவில் இன்னும் நடக்கிறது. நீங்கள் திரும்பச் சென்று கிரேட் சச்சின் டெண்டுல்கர் வளர்ந்தக் கதையைப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தக் கதை இன்னும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. 14 வயது வீரர் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அனைவரும் சொல்லுகின்றனர்”

- Advertisement -

ஹுசைன் பாராட்டு:

“நான் 14 வயதிற்குள் இருந்த போது அண்டர்-15 அளவில் கொஞ்சம் ரன்கள் அடித்துக் கொண்டிருந்தேன். உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் 35 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதுவே இந்திய கிரிக்கெட்டில் பற்றிய கதையாகும். இது தான் அவர்களுடைய ஆழமான பலமாகும். அவர்களுடைய மற்றொரு இளம் வீரர் உள்ளூரில் சதத்தை அடித்துள்ளார்”

இதையும் படிங்க: 217 ரன்ஸ்.. உத்தப்பாவை முந்தி சூரியகுமார் அரிதான சாதனை.. ராஜஸ்தானை விளாசி மும்பை தனித்துவ சாதனை

“வரலாற்று ரீதியாக சிறந்த வீரர்களை உருவாக்காத இந்தியாவின் சில பகுதிகளில் ஐபிஎல் எவ்வாறு நல்ல வீரர்களை கண்டறிந்து கொடுக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். இந்தப் பையன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிகிறது” என்று கூறினார்.

Advertisement