ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி 50வது போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் மும்பைக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா – ரியான் ரிக்கல்டன் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆரம்பத்திலேயே ராஜஸ்தான் அணியை அடித்து நொறுக்கினார்கள்.
ஓவருக்கு 10 ரன்கள் வெளுத்து வாங்கிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்தனர். அந்த வகையில் 12 ஓவர்கள் வரை அபாரமாக விளையாடிய அந்த ஜோடி 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது ரிக்கல்ட்டன் 61 (38) ரன்னில் தீக்சனா சுழலில் விக்கெட்டை இழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா தமது பங்கிற்கு 53 (36) ரன்கள் குவித்து ரியான் பராக் சுழலில் அவுட்டானார்.
மும்பை அசத்தல்:
அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் தம்முடைய ஸ்டைலில் வெளுத்து வாங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா ராஜஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கினார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி டெத் ஓவர்களில் மிரட்டலாக பேட்டிங் செய்து கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் ஃபினிஷிங் செய்தது.
அதில் சூரியகுமார் 48* (23) பாண்டியா, 48* (23) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் மும்பை 217/2 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூர் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற சாதனையை மும்பை சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2023 தொடரில் இதே ஜெய்ப்பூரில் ஹைதராபாத் அணியும் 217/6 ரன்கள் அடித்துள்ளது.
தனித்துவமான சாதனை:
அந்த வகையில் இந்தப் போட்டியில் மும்பை அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களும் குறைந்தபட்சம் 45+ ரன்கள் அடித்துள்ளார்கள். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் டாப் 4 பேட்ஸ்மேன்களும் 45+ ரன்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை மும்பை படைத்துள்ளது. இவை அனைத்தையும் விட இந்த வருடம் மும்பை இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதையும் படிங்க: அஸ்வினை சரியா யூஸ் பண்ணாம.. 10 கோடி வேஸ்ட்ன்னு சொல்லாதீங்க.. சிஎஸ்கே மீது ஹர்பஜன் அதிருப்தி
அந்த 11 போட்டிகளிலும் சூரியகுமார் யாதவ் குறைந்தபட்சம் 25+ ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் 25+ ரன்கள் அடித்த வீரர் என்ற தனித்துவமான சாதனையை சூரியகுமார் படைத்துள்ளார். இதற்கு முன் ராபின் உத்தப்பா 2014 ஐபிஎல் தொடரில் 10 முறை 25+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.



