டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் பெரிய ஆளாகனும்ன்னா இதை செய்தே ஆகணும் – நாசர் உசேன் அட்வைஸ்

hussain
- Advertisement -

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு முதன் முதலில் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக ஆடினார். துவக்கத்தில் மிடில் ஆர்டரில் ஆடிவந்த ரோஹித் எப்போது துவக்க வீரராக களமிறங்கினாரோ அதிலிருந்து அவரது ஆட்டம் வேறலெவலுக்கு சென்றது.

Rohith

- Advertisement -

அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் ஜொலித்த அவருக்கு தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினாலும் அவருக்கு நிரந்தர இடம் இந்தியாவில் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக டெஸ்ட் அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

ஆனால் கடந்த சில வருடங்களாக அனைத்து போட்டிகளிலும் அசத்தி வந்த ரோஹித்துக்கு சதம் மேல் சதம் குவிந்து கொண்டே வந்தது. தனது அபார திறமையை நிரூபித்ததன் காரணமாக 2018 ஆம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கும் இந்தியாவில் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கும் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

Rohith-2

மேலும் அவ்வாறு இறங்கிய தொடர்களிலும் சதங்களை விளாசி அசத்தினார். இந்நிலையில் அவர் தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இருக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் அறிவுரை கொடுத்துள்ளார்.

- Advertisement -

ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் ஆடினால் கண்டிப்பாக அவர் துவக்க வீரராகத்தான் ஆட வேண்டும். அதுதான் அவருக்கு சரியான இடம். விராட் கோலி டெஸ்ட் போட்டியில் ஆட என்ன செய்தாரோ அதைத்தான் ரோகித் சர்மாவும் செய்ய வேண்டும். இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் ஆடும்போது முதல் அரைமணி நேரம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை தொடவே கூடாது.

ஸ்லிப் பீல்டர்களுக்கு வேலை இல்லாமல் செய்ய வேண்டும். அவர்கள் சோர்ந்து விடுவார்கள். விராட் கோலி இதைத்தான் செய்வார். ரோஹித் சர்மாவும் இதையே செய்தால் கண்டிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரராக வர வாய்ப்பு உள்ளது. என்று கூறியுள்ளார் நாசர் உசைன்.

Advertisement