எல்லாத்தையும் பாத்த இங்கிலாந்து அடுத்ததா இந்தியாவையும் அடக்கி ஆளும் – நாசர் ஹுசைன் நம்பிக்கை, விவரம் இதோ

Nasser Hussain
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்தது. அதனால் 2001க்குப்பின் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றிய இங்கிலாந்து தங்களுடைய அதிரடியாக விளையாடும் அணுகுமுறை பற்றி விமர்சித்தவர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளது. அதாவது ஜோ ரூட்டுக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடி அணுகு முறையை பின்பற்றிய இங்கிலாந்து சொந்த மண்ணில் நியூஸிலாந்தை 2 – 0 (2) என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியிலும் வென்று 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

அப்போது தரமான பவுலிங்கை கொண்ட அணிக்கு எதிராக செல்லுபடியாகாது என்று எழுந்த விமர்சனங்களுக்கு தென்னாப்பிரிக்காவை 2 – 1 (3) தோற்கடித்து பதிலடி கொடுத்த இங்கிலாந்து வெளிநாட்டில் சாதிக்க முடியுமா என்ற கேள்விக்கும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று பதிலளித்தது. அதை தொடர்ந்து நியூசிலாந்து மண்ணில் 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரை வென்ற இங்கிலாந்து தற்போது உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஆரம்பத்தில் ஒய்ட்வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொடரை சமன் செய்து அசத்தியுள்ளது.

- Advertisement -

நாசர் ஹுசைன் நம்பிக்கை:
அப்படி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் தொடரில் ஆஸ்திரேலியா எதிர்கொண்ட இங்கிலாந்து அடுத்ததாக வரும் 2024 பிப்ரவரியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திக்க உள்ளது. அதில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் மிரட்டி வரும் இந்தியாவை இதே அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி வீழ்த்த முடியுமா என்று கேள்வி மீண்டும் இங்கிலாந்தின் மீது எழுந்துள்ளது.

இருப்பினும் கடந்த காலங்களில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்து விமர்சனங்களை உடைத்தது போலவே இத்தொடரிலும் அதிரடியாக செயல்பட்டு இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆஷஸ் முடிந்த கையுடன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் போன்ற தரமான ஸ்பின்னர்களை கொண்ட இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இங்கிலாந்துக்கு அடுத்தகட்ட மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ஸ்டுவர்ட் ப்ராட் இல்லையென்றாலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் அனுபவத்தால் இதுவரை பெற்ற வெற்றிகளைப் போலவே இந்தியாவிலும் இங்கிலாந்தால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “பஸ்பால் ஒரு பக்கம் வேலை செய்து விட்டு மற்றொரு பக்கம் நகர்ந்து விட்டதாக அவர்கள் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து அதே விமர்சனங்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தொடர்களிலும் இருந்தன. அந்த வரிசையில் தற்போது அடுத்த சவால் இந்தியாவில் காத்திருக்கிறது”

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப்பெரிய சவால் என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே இத்தொடரில் சுழலுக்கு எதிராக பஸ்பால் என்ற போட்டி உருவாகிறது. குறிப்பாக அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரை எதிர்கொள்வதை பார்ப்பது சிறப்பாக இருக்கும். அதே போல இந்தியாவுக்கு எதிராக ஜேம்ஸ் ஆண்டரசன் நல்ல சாதனைகளை படைத்துள்ளார். இந்தியாவை வீழ்த்துவதற்கு அவரைப் போன்று அனுபவிக்க வீரருடன் இளம் வீரர்களும் அவசியமாகும்”

இதையும் படிங்க:கழற்றி விடப்பட்ட மைக் ஹெசன், சஞ்சு பங்கர் – 2024 ஐபிஎல் கோப்பை வெல்ல வெற்றிகரமான வெளிநாட்டு கோச்’சை நியமித்த ஆர்சிபி

“ஏற்கனவே சுமார் 700 விக்கெட்களை எடுத்துள்ள அவர் மீண்டும் வலைப்பயிற்சிக்கு சென்று இத்தொடருக்காக இப்போதே தயாராக துவங்கியுள்ளது நல்ல அறிகுறியாகும். குறிப்பாக ப்ராட் இல்லாத சூழ்நிலையில் அவருடைய அனுபவம் இந்தியாவில் முக்கியமாகும். ஆனால் கிறிஸ் ஓக்ஸ் வெளிநாட்டில் சிறப்பாக செயல்படாததால் வாய்ப்பு பெறுவாரா என்பதை பார்ப்போம். எனவே ப்ராட், ஓக்ஸ் ஆகியோர் இல்லாத நிலைமையில் இந்தியாவில் அசத்துவதற்கு உங்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் அனுபவம் தேவை” என்று கூறினார்.

Advertisement