WTC Final : இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? நாசர் ஹுசேன், ஏபிடி கணிப்பு

ABD
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IND-vs-AUS

- Advertisement -

அதேவேளையில் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறித்த கணிப்புகளை முன்னாள் வீரர்கள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து பேசிய ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறுகையில் :

IND

ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனவே நிச்சயம் அவர்கள் ஆஸ்திரேலிய அணியை இந்த போட்டியில் வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு இந்த மைதானம் பேட்டிங் செய்ய நல்ல மைதானம். நிச்சயம் இந்த போட்டியின் கடைசி இரு நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் புகுந்து விளையாடுவார்கள் என்று நினைப்பதாக ஏ.பி.டி கூறியுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று மற்றொருபுறம் பேசிய நாசர் ஹுசைன் கூறுகையில் : இந்திய அணி எந்த விதமான மைதானத்திலும், எந்த விதமான அணியையும் வெல்லும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு சிறப்பான செயல்பாட்டை இந்திய அணி வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மைதானத்தில் அவர்களை தடுமாற வைத்த இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து சூழலிலும் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெறும் என்று தான் கருதுவதாக நாசர் ஹூசேன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : WTC Final : ஃபைனலில் பிட்ச் எப்படி இருக்கும்? ஓவல் மைதான தயாரிப்பாளரிடம் நேரடியாக அஸ்வின் வாங்கிய ரிப்போர்ட் இதோ

கடந்த முறை நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி தோல்வியை சந்தித்த போது மைதானத்தின் தன்மையை சரியாக கணிக்க தவறி விட்டார்கள் என்று நான் கருதுகிறேன். ஆனால் இம்முறை அவர்கள் சரியான கலவையில் களமிறங்கி வெற்றியை பெறுவார்கள் என்று கருதுவதாக நாசர் ஹுசேன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement