எல்லாரும் அப்படி தான் பயமுறுத்துவாங்க.. ஸ்டீவ் வாக், ரெய்னாவை பாருங்க.. இந்திய வீரருக்கு நாசர் ஹுசைன் அட்வைஸ்

Nasser Hussain 3
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் படித்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த போதிலும் பாண்டியா காயமடைந்ததால் திடீரென வாய்ப்பு பெற்ற முகமது ஷமி வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவது மட்டுமே கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

அப்படி பயமுறுத்துவாங்க:
ஏனெனில் அறிமுகமானது முதலே சுழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த பலவீனம் உலகிற்கு அம்பலமான நிலையில் 2022இல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் பால்கனியில் இருந்தே பயிற்சியாளர் பிரென்டன் மெக்கல்லம் ஷார்ட் பந்தை வீசுமாறு சொல்லி அவரை அவுட்டாக்கினார்.

அதனால் விரைவில் முன்னேறுங்கள் என்று வாசம் ஜாஃபர் போன்ற முன்னாள் வீரர்கள் எச்சரித்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த பின் இந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக அதே போன்ற பந்தில் ஸ்ரேயாஸ் அவுட்டானதே ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதனால் தற்போது சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அவரை நீக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அனைவரும் விமர்சித்தே பயமுறுத்துவார்கள் என்று தெரிவிக்கும் நாசர் ஹுசைன் ஆரம்ப காலங்களில் சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் வாக் போன்றவர்கள் தடுமாறினாலும் நாளடைவில் நல்ல பயிற்சியால் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அசத்தியதை ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆலோசனையாக கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷார்ட் பிட்ச் பந்துகளை நீங்கள் ஒவ்வொரு முறையில் சந்திப்பீர்கள் என்பது மிகவும் மோசமானதாகும். இது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆரம்பமானது”

இதையும் படிங்க: 3 ஃபோர்.. 7 சிக்ஸ்.. 81 ரன்.. பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது அதிரடிக்கு காரணம் இதுதான் – பக்கர் ஜமான் பேட்டி

“வார்த்தை மிக விரைவாக பரவுகிறது. அதற்கு எதிராக ஒரு பாதிப்பு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் அதை அதிகமாக எதிர்கொண்டு அதிகமாக பயிற்சி செய்யும் போது நிச்சயமாக முன்னேற்றமடைவீர்கள். ஷார்ட் பந்துகளுக்கு எதிராக சுரேஷ் ரெய்னா முதலாவதாக பிரச்சனைகளை சந்தித்தார். ஸ்டீவ் வாக் அதே பந்துகளில் தடுமாறினார். ஆனால் கடைசியில் அந்த பந்துகளில் அவர்களை அவுட்டாக்குவது கடினமாக மாறியது. எனவே அவரும் அதில் கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement