- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த ரெண்டும் சாதகமா இருந்துச்சு.. அதனால தான் இந்தியா ஈஸியா ஜெயிச்சுட்டாங்க.. நாசர் ஹுசைன்

ஐசிசி 2024 உலகக் கோப்பையின் 2வது செமி ஃபைனலில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56, சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்தனர்.

அதை சேசிங் செய்த இங்கிலாந்து சுமாராக விளையாடி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்து வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை இத்தொடரிலிருந்து வெளியேற்றிய இந்தியா ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்க தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

எல்லாமே சாதகம்:
முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் போல இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடிக்கும் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்திருந்தார். ஆனால் இம்முறை செமி ஃபைனல் நடைபெற்ற கயானா மைதானம் முன்கூட்டியே தெரிந்திருந்த காரணத்தாலும் அங்கு பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததாலும் இந்தியா எளிதாக இங்கிலாந்தை வீழ்த்தியதாக அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் பாராட்டையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ள அவர் இது பற்றி டெய்லி மெயில் பத்திரிகையில் கூறியுள்ளது பின்வருமாறு. “மைதானம், பிட்ச் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. எனவே வியாழக்கிழமை நடைபெற்ற போட்டி இந்தியா டி20 உலகக் கோப்பையின் ஃபைனல் எட்டும் நோக்கத்தில் அமைந்தது என்பதே கதை”

- Advertisement -

“இருப்பினும் விரிவாக பார்க்கும் போது செயின்ட் லூசியாவில் நல்ல பிட்ச்சில் அவர்கள் 50 ஓவர் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலுக்கு வந்தனர். அந்த பிட்ச் ஸ்லோவாக லோவாக இருந்தும் அவர்கள் கச்சிதமாக வென்றனர். எனவே அவர்கள் விளையாடிய விதத்தில் நியாயம் இருக்கிறது. இதுவரை தோல்வியை சந்திக்காத தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் பார்படாஸ் நகரில் சனிக்கிழமை ஃபைனலில் விளையாட உள்ளன”

இதையும் படிங்க: இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள 2 அணிகளுக்கும் இடையேயுள்ள ஒரு ஒற்றுமை – ஆனாலும் இந்தியா மாஸ் தான்

“2022 செமி ஃபைனலில் அடித்த 168 ரன்களை விட இந்தியா கொஞ்சம் இங்கே அதிக ரன்கள் அடித்தது. கயானாவில் சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தது. பந்தை கீழே சுழற்றிய ஸ்பின்னர்கள் 171 ரன்களை எளிதாக கட்டுப்படுத்தினர். தனக்கு பிடித்த ஃபுல் ஷாட் அடித்து ரோஹித் சர்மா மற்றுமொரு அரை சதமடித்தார். சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர்” என்று கூறினார்.

- Advertisement -