கழற்றி விட்டதே நல்லது தான், டிகே சாதனையை தகர்த்து சென்னைக்கு பதிலடி கொடுத்த ஜெகதீசன் – செய்த ஹாட்ரிக் சம்பவம் இதோ

Jagadeesan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் வீரர்கள் ஏலம் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது. இருப்பினும் ட்வயன் ப்ராவோவை கழற்றி விட்ட அந்த அணி தமிழக வீரர்கள் ஹரி நிஷாந்த் மற்றும் நாராயன் ஜெகதீசன் ஆகியோரையும் விடுவித்துள்ளது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஏனெனில் பெயரில் மட்டும் சென்னை இருக்கும் வகையில் சமீப காலங்களாகவே தமிழக வீரர்களை புறக்கணித்து வரும் அந்த அணி நிர்வாகம் பெயருக்காக அந்த இருவரையும் குறைந்த விலைக்கு வாங்கி தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்து வந்தது. ஆனால் எதிரணிகளில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக் என தமிழக வீரர்களுக்கு மவுசு அதிகப்படியாக காணப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் பெஞ்சில் அமர்ந்திருந்த 2 இளம் தமிழக வீரர்களையும் கழற்றி விட்ட சென்னை அணியை தமிழக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

நல்லது தான்:
அதில் குறிப்பாக நாராயன் ஜெகதீசனுக்கு எப்போதுமே தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்காத சென்னை இதுவரை 7 போட்டிகளில் வாய்ப்பளித்து கழற்றி விட்டுள்ளது. இருப்பினும் டிஎன்பிஎல் போன்ற தொடர்களில் அசத்தி வரும் அவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணிக்காக சக்கை போடு போட்டு வருகிறார். குறிப்பாக நவம்பர் 17ஆம் தேதியன்று நடைபெற்ற கோவா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழகத்துக்கு தொடக்க வீரராக களமிறங்கி 15 பவுண்டரி 6 சிக்ருடன் சதமடித்து 168 (140) ரன்கள் குவித்த அவர் 50 ஓவர்களில் 373/4 ரன்கள் குவிக்க உதவினர்.Jagadeesan

அவருடன் சாய் சுதர்சனும் 117 (112) ரன்கள் எடுத்த அதிரடியில் பந்து வீச்சிலும் அசத்திய தமிழகம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 168 ரன்கள் குவித்த அவர் விஜய் ஹசாரே கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தமிழக வீரர் என்ற தினேஷ் கார்த்திக்கின் 10 வருட சாதனையை தகர்த்தார். அந்த பட்டியல்:
1. நாராயன் ஜெகதீசன் : 168, கோவாவுக்கு எதிராக, 2022*
2. தினேஷ் கார்த்திக் :154*, ஹைதராபாத்துக்கு எதிராக, 2011

அதற்கு முன்பாகவே நவம்பர் 15ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டிஸ்கர் அணிக்கு எதிரான போட்டியிலும் சதமடித்த ஜெகதீசன் 107 (113) குவித்து 14 ரன்கள் வித்யாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற உதவினார். அதற்கு முன்பாக நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்தை 206 ரன்களை துரத்தும் போது சதமடித்து 114* (112) ரன்கள் விளாசிய அவர் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

மொத்தத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் கடைசி 3 போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களை விளாசியுள்ள அவர் சென்னை கழற்றி விட்ட அடுத்த நாளே அந்த அணி நிர்வாகத்தின் கன்னத்தில் அறைந்தது போல் ஹாட்ரிக் சதங்களை நொறுக்கி பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இப்படிப்பட்ட தரமான வீரருக்கு வாய்ப்பளிக்காமல் கழற்றி விட்ட சென்னை நிர்வாகத்தை கிண்டலடிக்கும் தமிழக ரசிகர்கள் நீங்கள் செய்ததும் நன்மைக்கு தான் என்று நன்றியும் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் சென்னை அணியில் இருந்தால் வாய்ப்பு கிடைக்காமல் கடைசி வரை அமர்ந்து வயதான பின்பு வெளியேறினால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் கேரியரே முடிந்து விடும் நிலைமை வரலாம். ஆனால் இப்படி கழற்றி விடப்பட்டு உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியுள்ள அவருக்கு வரும் ஏலத்தில் வேறு ஏதேனும் அணிக்கு தேர்வாகி சிறப்பாக செயல்பட்டு வருங்காலங்களில் பெரிய அளவில் ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில் சென்னை நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் தமிழக ரசிகர்கள் தயவு செய்து வரும் டிசம்பரில் நடைபெறும் நேரத்தில் மீண்டும் அவரை வாங்கி பெஞ்சில் அமர வைக்க வேண்டாம் என்று கோரிக்கையும் வைக்கிறார்கள்.

Advertisement