ரொம்ப ஆடாம நிகழ்காலத்துக்கு வாங்க.. வம்பிழுத்தா சும்மா விடமாட்டோம்.. மோதிக்கொண்ட வங்கதேச – இலங்கை வீரர்கள்

SL vs BAN
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இலங்கை வென்றது. முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் டெல்லியில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக காலதாமதத்தால் அவுட்டான வீரர் என்ற பரிதாபமான சாதனை படைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போட்டியில் களமிறங்கிய பின் தம்முடைய ஹெல்மெட் பழுதாக இருந்ததால் அதை மேத்தியூஸ் மாற்றுவதற்கு முயற்சித்தார். அப்போது வேண்டுமென்றே கால தாமதம் செய்வதாக நடுவரிடம் புகார் செய்த சாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்குமாறு ஒற்றைக் காலில் நின்று வாங்கியது வரலாற்றில் மறக்க முடியாத சர்ச்சை நிகழ்வாக அமைந்தது.

- Advertisement -

மோதிய வீரர்கள்:
அந்த நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டை எடுத்த வங்கதேச வீரர் ஃசோரிபுல் இஸ்லாம் 2023 மேத்யூஸை அவுட்டாக்கியதை கலாய்க்கும் வகையில் கொண்டாடினார். இறுதியில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இலங்கை அணி வீரர்கள் அனைவரும் டைம்ட் அவுட் கொண்டாட்டம் செய்து சோரிபுல் இஸ்லாம் மற்றும் வங்கதேச அணியினரை அவர்களுடைய சொந்த மண்ணில் கலாய்த்து தக்க பதிலடி கொடுத்தனர்.

ஆனால் அதனால் கடுப்பான வங்கதேசம் கேப்டன் நஜ்முல் சாண்டோ இன்னும் பழையதை நினைத்துக்கொண்டு அதிகம் கொண்டாடாமல் நிகழ்காலத்திற்கு வாருங்கள் என்று இலங்கை அணிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி தொடரின் முடிவில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “இது ஆக்ரோஷமான கையாளுதல் அல்லது எதைப் பற்றியதும் கிடையாது”

- Advertisement -

“அவர்கள் நேரம் முடிந்து விட்ட செய்கையை காட்டினார்கள் தானே? இதிலிருந்தே அவர்கள் அந்த சம்பவத்திலிருந்து (மேத்தியூ விக்கெட்) இன்னும் நகரவில்லை என்பது தெரிகிறது. எனவே அவர்கள் அதிலிருந்து வெளியேறி நிகழ்காலத்திற்கு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் விதிமுறைக்கு உட்பட்டு தான் அந்த அவுட்டை செய்தோம். ஆனாலும் அவர்கள் அதைப் பற்றி இன்னும் வெறித்தனமாக இருக்கின்றனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஸ்டோக்ஸை விட ரோஹித் அப்படி ஒன்னும் பண்ணிடல.. இந்தியாவின் வெற்றிக்கு காரணம் அவங்க தான்.. கிரேம் ஸ்வான்

அதற்கு நாங்கள் மறந்த மேத்தியூஸ் விக்கெட்டை வங்கதேச வீரர் சோரிபுல் இஸ்லாம் மீண்டும் கொண்டாடி துவக்கியதாலேயே இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் பதிலுக்கு கொண்டாடியதாக கூறியுள்ளார். எனவே தங்களை சீண்டினால் சும்மா விட மாட்டோம் என்று தெரிவிக்கும் குசால் மெண்டிஸ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்களில் ஒருவர் டைம்ட் அவுட்டை கொண்டாடினார் அல்லவா? அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. எனவே நாங்களும் அப்படி எங்களுடைய வழியில் கொண்டாடுவோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் இப்படி கொண்டாடினோம்” என்று கூறினார்.

Advertisement