சிக்சர்களை பறக்கவிட்டு வங்கதேசத்தை நொறுக்கிய ஆப்கன் இளம் வீரர் – 2 வரலாற்று சாதனைகளுடன் மாஸ் வெற்றி

Afg vs Ban Najibullah Zadran
Advertisement

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் ஆகஸ்ட் 30ஆம் தேதியான நேற்று குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஆப்கானிஸ்தானின் தரமான சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. நைம் 6, ஹைக் 5, கேப்டன் சாகிப் அல் ஹசன் 11, முஸ்தபிசுர் ரஹீம் 1, அகில் ஹொசைன் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 53/5 என திண்டாடிய அந்த அணி 100 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது.

ban

அந்த மோசமான நிலைமையில் பொறுப்பை காட்டிய முகமதுல்லா 25 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் 4 பவுண்டரி 1 சிக்சர்களை அடித்த ஹொசைன் 48* (31) ரன்களை குவித்து மனத்தை காப்பாற்றியதால் தப்பித்த வங்கதேசம் 20 ஓவர்களில் 127/7 ரன்கள் எடுத்தது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் சார்பில் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 128 என்ற எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு தொடக்க வீரர் ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ் தடுமாறி 11 (18) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

தடுமாறிய ஆப்கானிஸ்தான்:
அதனால் மேற்கொண்டு விக்கெட்டை விடக்கூடாது என்ற வகையில் மெதுவாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தானை தரமாக பந்துவீசி அதிரடியாக ரன்களை குவிக்க விடாமல் மடக்கி பிடித்த வங்கதேசம் அழுத்தத்தை கொடுத்தது. போதாகுறைக்கு பிட்ச்சும் ஓரளவு பந்துவீச்சுக்கு கை கொடுத்ததால் அவசரப்படக் கூடாது என்று பயந்த வகையில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தானுக்கு மற்றொரு தொடக்க வீரர் ஹசரதுல்லாவும் தடுமாறி 23 (26) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய இப்ராகிம் ஜாட்ரான் பொறுப்புடன் ரன்களை சேர்க்க மறுபுறம் பொறுமையான பாணியில் விளையாடிய கேப்டன் முகமது நபியும் 8 (9) ரன்களில் அவுட்டானார். அதனால் இலக்கு குறைவாக இருந்தாலும் 13 ஓவர்களில் 62/3 என திணறிய ஆப்கானிஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது கடைசி 42 பந்துகளில் 65 ரன்கள் தேவை என்ற அழுத்தமான சூழ்நிலையில் களமிறங்கிய மற்றொரு இளம் வீரர் நஜிபுல்லா ஜாட்ரான் அழுத்தத்தை கொடுத்த வங்கதேசத்தை அலறவிடும் வகையில் அதிரடியாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சிக்சர்களை பறக்க விட முயற்சித்த அவர் முகமத் சைபுதீன் வீசிய 18வது ஓவரில் 4, 0, 6, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார். தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்த அவர் வெறும் 17 பந்துகளில் 1 பவுண்டரி 6 மெகா சிக்சர்களை பறக்கவிட்டு 44* ரன்களை 252.94 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி சிக்சருடன் ஃபினிஷிங் கொடுத்தார்.

சூப்பர் 4இல் ஆப்கானிஸ்தான்:
அவருடன் கம்பெனி கொடுத்த இப்ராஹிம் ஜாட்ரன் 4 பவுண்டரியுடன் 42* (41) ரன்கள் எடுத்தார். அதனால் 18.3 ஓவரில் 131/3 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்யாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்ற ஆப்கானிஸ்தான் ஏற்கனவே தனது முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தியிருந்தது. அதன் காரணமாக குரூப் பி பிரிவில் பங்கேற்ற 2 லீக் போட்டிகளிலும் அதிரடியான வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த அந்த அணி ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்று முதல் அணியாக தகுதி பெற்ற அசத்தியுள்ளது.

- Advertisement -

மறுபுறம் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பி பந்துவீச்சில் போராடினாலும் கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்கிய வங்கதேசம் இந்த ஆசிய கோப்பையை தோல்வியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு அதிரடியாக 43* ரன்கள் குவித்த நஜிபுல்லா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அதைவிட கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியான சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேசிங் செய்யும்போது கடைசி கட்ட ஓவர்களில் (16 – 20) அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற இயன் மோர்கன் – திசாரா பெரேரா ஆகியோரது சாதனைகளை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நஜிபுல்லா ஜாட்ரான் : 18*
2. இயன் மோர்கன்/திசாரா பெரேரா : 17

இதையும் படிங்க : IND vs HK : ஹாங்காங் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் 50 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நஜிபுல்லா ஜாட்ரான் : 53*
2. டேவிட் மில்லர் : 47

Advertisement