IND vs HK : ஹாங்காங் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் மோதிவரும் இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்த எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி முதலாவதாக பாகிஸ்தான் அணியை எதிர்த்து கடந்த 28-ஆம் தேதி விளையாடியது. அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் துவங்கியுள்ளது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடரின் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த தொடரின் நான்காவது போட்டியாக இன்று மாலை இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை ஹாங்காங் அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது.

இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை இவ்விரு அணிகளும் விளையாடியது கிடையாது, எனவே இதுவே முதல் முறை. மேலும் அனுபவம் வாய்ந்த இந்திய அணி ஹாங்காங் அணியை இன்றைய போட்டியில் எளிதில் வீழ்த்தி விடும் என்பது உறுதி என்பதனால் இந்திய அணியின் நிலை தற்போது மேலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஏற்கனவே இந்த ஆசிய கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கிய இந்திய அணி அந்த பிளேயிங் லெவனில் இருந்து எந்த மாற்றத்தையும் செய்யாது என்பதினாலும் இறுதி போட்டி வரை ஒரே லைன் அப் கொண்ட வீரர்களுடன் இந்திய அணி செல்லும் திட்டம் வைத்திருப்பதால் நிச்சயம் இன்றைய போட்டிக்கான இந்திய அணியிலும் எந்த மாற்றமும் இருக்காது.

- Advertisement -

அதன் காரணமாக கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்றைய ஹாங்காங் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ராஸ் டெய்லரை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர் – விவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) ரவீந்திர ஜடேஜா, 8) புவனேஷ்வர் குமார், 9) ஆவேஷ் கான், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement