ராஸ் டெய்லரை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர் – விவரம் இதோ

Nz
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பல்வேறு வீரர்கள் தொடர்ச்சியாக ஓய்வு அறிவித்து ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு அணியை சேர்ந்த வீரர்களும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் வேளையில் தற்போது நியூசிலாந்து அணியை சேர்ந்த அனுபவ ஆல் ரவுண்டரான காலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.

grandhomme 1

- Advertisement -

36 வயதான கிராண்ட் ஹோம் கடந்த 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 29 டெஸ்ட் போட்டிகள், 45 ஒருநாள் போட்டிகள் மற்றும் 41 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர 2017 முதல் 2019 வரை 25 ஐபிஎல் போட்டிகளிலும் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்த அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இளம் வீரர்களுக்கு வழி விடும் வகையில் நான் எனது ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். அதோடு தற்போது எனக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டு வருவதால் மேலும் பயிற்சி செய்து தொடர்ச்சியாக விளையாட முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன்.

grandhomme

அதுமட்டும் இன்றி இனி என்னுடைய குடும்பத்திற்காக நேரத்தை செலவிடலாம் என்றும் கிரிக்கெட்டிற்கு பிறகு அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து முடிவெடுக்கவே இந்த ஓய்வு நான் அறிவித்துள்ளேன். கடந்த சில வாரங்களாகவே என் மனதிற்குள் ஓய்வு குறித்த எண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது. அந்த வகையில் இது ஓய்வினை அறிவிக்க சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்காக பத்து வருடம் விளையாடியது மிகப் பெருமையான ஒன்று. கடந்த 10 ஆண்டுகளில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். அதேபோன்று என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் என்னுடன் வந்தவர்கள், துணை நின்றவர்கள், எனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கிரான்ட்ஹோம் கூறினார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றின் சிறந்த ஆல்-டைம் கனவு 11 பேர் ஆசிய அணி – சிறப்பு பதிவு

அவரது இந்த ஓய்வு அறிவிப்பு தற்போது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் அண்மையில் தான் நியூசிலாந்து அணியை சேர்ந்த அனுபவ வீரரான ராஸ் டைலர் ஓய்வை அறிவித்து வெளியேறிய நிலையில் தற்போது காலின் டி கிராண்ட் ஹோம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement