ஆசிய கோப்பை வரலாற்றின் சிறந்த ஆல்-டைம் கனவு 11 பேர் ஆசிய அணி – சிறப்பு பதிவு

Asia Cup Trophy
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 15ஆவது முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 1984 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கே சவால் கொடுக்கும் வகையில் தரமான ஆசிய வீரர்கள் தங்களது நாட்டுக்காக வெற்றியைப் பெற்றுக் பெற்றுக்கொடுத்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக தங்களை நிரூபித்துள்ளார்கள். மேலும் வரலாற்றில் நடைபெற்ற பெரும்பாலான உலக கோப்பைகளின் இறுதிப்போட்டியில் ஏதேனுமொரு ஆசிய அணி இடம் பெறாமல் இருக்காது.

INDvsPAK

- Advertisement -

அந்தளவுக்கு அன்றும் இன்றும் தரமான வீரர்களை உருவாக்கி வரும் ஆசிய கண்டத்து நாடுகள் தங்களுக்கிடையே சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இந்த தொடரில் முழுமூச்சுடன் போராடும் என்பதால் எப்போதுமே ஆசிய கோப்பை எப்போதும் தரமான தொடராகவே இருந்து வருகிறது. அந்த வகையில் ஆசிய கோப்பையில் சிறந்து விளங்கிய வீரர்களை வைத்து சிறந்த ஆல்-டைம் கனவு 11 பேர் கொண்ட ஆசிய அணியை பற்றி பார்ப்போம்:

1. சனாத் ஜெயசூரியா: 90களின் இறுதியில் அறிமுகமாகி இன்று வரை இலங்கை கண்டெடுத்த மகத்தான அதிரடி தொடக்க வீரராகக் கருதப்படும் இவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்களையும் அதிக சதங்களையும் விளாசிய பேட்ஸ்மேனாக இப்போதும் சாதனை படைத்துள்ளார்.

Jayasuriya

அதேபோல் சச்சின் போன்ற தரமான பேட்ஸ்மேன்களையும் அவ்வப்போது தனது மாயாஜால சுழலால் திணறடித்த இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே அதிரடியான தொடக்க வீரராக பகுதிநேர பந்துவீச்சாளராகவும் இவர் இந்த அணியில் இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

2. சச்சின் டெண்டுல்கர்: உலக கிரிக்கெட்டில் ஆசிய கிரிக்கெட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சர்வதேச அரங்கில் 100 சதங்களையும் 30000+ ரன்களையும் குவித்து ஏராளமான வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுக் கொடுத்த இவர் இடது கை பேட்ஸ்மேனான ஜெயசூர்யாவுடன் வலதுகை பேட்ஸ்மேனாக ஓபனிங் ஜோடியாக களமிறங்கும் தகுதி பெற்றுள்ளார்.

sachin 2

ஆசிய கோப்பை வெள்ளை பந்து கிரிக்கெட் என்ற நிலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த தொடக்க வீரராக சாதனை படைத்துள்ள இவர் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ளார். இவரும் பகுதிநேர பந்துவீச்சாளர் என்பதை மறந்து விடக்கூடாது.

- Advertisement -

3. விராட் கோலி: ஆசிய கண்டத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 3வது இடத்தில் ரன் மெஷினாக செயல்பட்டு வரும் இவர் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் ஜாம்பவானாக ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து வருகிறார். ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த 3வது இந்திய பேட்ஸ்மேனாக விளையாடி வரும் இவர் இந்த கனவு அணியில் 3வது இடத்தில் விளையாடும் தகுதியுடையவராக இடம் பெறுகிறார்.

Sangakkara

4. குமார் சங்கக்காரா: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இடதுகை பேட்ஸ்மேனாகவும் இலங்கை பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ள இவர் ஆசிய கோப்பையிலும் அதிக ரன்கள் குவித்த 2வது பேட்ஸ்மேனாகவும் அதிக அரை சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ளார். எனவே வலது கை பேட்ஸ்மேனான விராட் கோலியுடன் மிடில் ஆர்டரை துவங்கும் இடதுகை பேட்ஸ்மேனாக இவர் இந்த அணியில் இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

5. அர்ஜுனா ரணதுங்கா: 1996 உலகக்கோப்பையை வென்ற கேப்டனான இவர் வரலாற்றில் இலங்கையின் மிகச்சிறந்த மிடில் ஆடர் பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் செயல்பட்டுள்ளார். இலங்கைக்கு 2 ஆசிய கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ள அவர் 3 ஆசிய கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ளார். எனவே இந்த அணியில் முக்கியமான 5வது இடத்தில் இவருக்கு நிச்சயமாக இடமுள்ளது.

Afridi

6. ஷாஹித் அப்ரிடி: பாகிஸ்தானின் அதிரடி நாயகனாக இவர் ஆசிய கோப்பையில் அதிக ரசிகர்கள் அடித்த பேட்ஸ்மேனாக இன்றும் சாதனை படைத்துள்ளார். அதுபோக ஆசிய கோப்பை வரலாற்றில் 140.74 என்ற அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்த பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ளார். அத்துடன் தரமான சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் இவர் இந்த அணியில் ஃபினிஷராக விளையாடும் தகுதியுடையவர்.

7. எம்எஸ் தோனி: வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்க்கு இணையாக ஒரு கேப்டனை பொருத்தலாம் என்றால் அது நிச்சயம் எம்எஸ் தோனி ஆவார். பாண்டிங்கையும் மிஞ்சி 3 வகையான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள இவர் 2 ஆசிய கோப்பைகளையும் வென்றுள்ளார்.

Trophies Won By MS Dhoni

அதேபோல் மின்னல் வேக விக்கெட் கீப்பிங் செய்வதில் சங்ககாராவை மிஞ்சியுள்ள இவர் பினிஷிங் செய்வதில் மைக்கேல் பெவனுக்கு நிகராக போற்றப்படுகிறார். மேலும் ரணதுங்கா அசாருதீன் போன்றவர்கள் 2 ஆசிய கோப்பைகளை வென்றாலும் 20, 50 ஓவர் என 2 வகைகளாக தற்போது உருமாறியுள்ள ஆசிய கோப்பைக்கு 2007 டி20, 2011 50 ஓவர் உலககோப்பைகளையும் 2012 50 ஓவர், 2016 20 ஓவர் ஆசிய கோப்பைகளை வென்றுள்ள இவர்தான் சரியான கேப்டன் ஆவார்.

8. இர்பான் பதான்: ஆசிய கோப்பை அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ள இவர் பேட்டிங் ஆல்-ரவுண்டர் என்ற நிலைமையில் 3வது வேகப்பந்து வீச்சாளராக இந்த அணியில் இடம் பிடிக்கிறார்.

wasim akram

9. வாசிம் அக்ரம்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள இவர் ஸ்விங் கிங் என்று உலகத்தால் போற்றப்படுகிறார். பேட்டிங்கிலும் இவர் கணிசமான ரன்களை சேர்க்கும் திறமை பெற்றுள்ளார்.

10. முத்தையா முரளிதரன்: சர்வதேச அரங்கில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக இலங்கைக்கும் ஆசியாவுக்கும் பெருமை சேர்க்கும் இவர் ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக இன்றும் சாதனை படைத்துள்ளார். எனவே இவர் இல்லாத ஆசிய அணி சிறப்பாக இருக்காது.

Malinga

11. லசித் மலிங்கா: உலகிற்கே யார்க்கர் பந்துகளை எவ்வாறு தொடர்ந்து வீச முடியும் என்று செய்து காட்டிய இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த பவுலராகவும் சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள இவர் இந்த அணியில் விளையாட முழு தகுதியானவர்.

ஆல்-டைம் ஆசிய கனவு அணி இதோ: சனத் ஜெயசூர்யா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, குமார் சங்ககாரா, அர்ஜுனா ரணதுங்கா, சாகித் அப்ரிடி, எம்எஸ் தோனி (கேப்டன்&கீப்பர்), இர்பான் பதான், வாசிம் அக்ரம், முத்தையா முரளிதரன், லசித் மலிங்கா.

Advertisement