இங்க கத்துகிட்ட வித்தைய அங்க யூஸ் பண்ணப்போறேன். நீங்களும் பாக்க போறீங்க – ஜெகதீசன் அதிரடி

Jagadeesan
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறயிருக்கும் 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் கோடி கணக்கில் ஏலத்தில் சென்றனர். அதேவேளையில் இந்திய வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. 400-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

IPL 2022 (2)

அந்தவகையில் இந்தியாவில் தற்போது ரஞ்சி தொடரானது நடைபெற்று வரும் இவ்வேளையில் உள்ளூர் அணிகளை சேர்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஏலத்தில் 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்து. அண்மையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெகதீசனை கொல்கத்தா அணி தேர்வு செய்தது உண்மையிலே ஒரு நல்ல தேர்வு என்றே கூறலாம்.

Jagadeesan

இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக எதிர்வரும் சீசனில் விளையாடயிருப்பது குறித்து பேசிய தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் கூறுகையில் : ஒவ்வொரு வீரருக்கும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்தவகையில் நானும் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 5 கோடிக்கு இவர் வொர்த் இல்ல. இந்த சீஸனின் மட்டமான தேர்வு இவருடையது தான் – ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து

சென்னை அணியில் நான் இருந்த வரை தோனியிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவற்றை எதிர்வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் அசத்தலான பார்மில் இருக்கும் ஜெகதீசன் நிச்சயம் இந்த ஐ.பி.எல் தொடரில் கலக்கப்போவது உறுதி என்றும் தமிழக ரசிகர்கள் அவர்களது கருத்தினை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement