அது சும்மா ட்ரைலர் தான் மெய்ன் ஆட்டத்தை அங்க பாப்பீங்க – இந்திய அணியை மறைமுகமாக எச்சரித்த ஷாஹீன் அப்ரிடி

Shaheen Afridi 3
- Advertisement -

இலங்கையின் கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டி நடைபெற உள்ளது. ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளாக இருக்கும் இவ்விரு அணிகள் மோதும் இப்போட்டிக்கு மழையை கருத்தில் கொண்டு ஆசிய கவுன்சில் ஸ்பெஷலாக ரிசர்வ் நாள் அறிவித்துள்ளது. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் மழையால் ரத்து செய்யப்பட்ட இத்தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையான போராட்டத்திற்கு பின் 266 ரன்கள் சேர்த்தது.

அப்போட்டியில் பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பெரிய சவாலை கொடுப்பார் என்று நிறைய முன்னாள் வீரர்கள் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதையும் தாண்டி மிரட்டிய அவர் இந்திய பேட்டிங் துறையின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகவும் முதுகெலும்பாகவும் கருதப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை ஒரே போட்டியில் அவுட்டாக்கிய முதல் பவுலர் என்ற சாதனை படைத்து இந்தியாவை தெறிக்க விட்டார்.

- Advertisement -

ட்ரைலர் தான்:
அதனால் 66/4 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இந்தியாவை மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஓரளவு காப்பாற்றினர். இந்நிலையில் லீக் சுற்றில் வெளிப்படுத்தியதை விட தம்முடைய முதன்மையான சிறந்த செயல்பாடுகள் சூப்பர் 4 சுற்றில் தான் வெளிப்படும் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சாகின் அப்ரிடி பேசியுள்ளார். இது பற்றி போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் மிகவும் ஸ்பெஷலானது. அதை நிறைய மக்கள் பார்ப்பார்கள். நானும் அதை ஒரு ரசிகராக 19 வயது கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறேன். மேலும் இந்தியாவுக்கு எதிராக லீக் சுற்றில் வெளிப்படுத்தியது தம்முடைய சிறந்த ஸ்பெல் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் இது வெறும் துவக்கம் மட்டுமே. என்னுடைய சிறந்த செயல்பாடுகள் இனிமேல் தான் வரும்”

- Advertisement -

“அத்துடன் இந்த இளம் வயதிலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் நீங்கள் புதிய பந்தில் சிறப்பாக செயல்படும் போது அனைவரும் உங்கள் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பை வைத்திருப்பார்கள். எனவே புதிய மற்றும் பழைய பந்தில் எங்களுடைய வேலை என்ன என்பதை நாங்கள் அறிவோம். எங்களில் நசீம் ஷா எங்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கிறார். அதனால் நான் மற்றும் நாசீம் ஷா ஆரம்பகட்ட விக்கெட்டுகளை எடுப்பதில் கவனம் செலுத்துகிறோம்”

இதையும் படிங்க: சூப்பர் 4 போட்டியில் வெல்ல இந்தியாவை விட எங்களுக்கு தான் அதிக சாதகம் இருக்கும் – மீண்டும் எச்சரித்த பாபர் அசாம்

“அத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடிய வெளிநாட்டு வீரர்களுடன் நாங்கள் இந்தியாவில் இருக்கும் மைதானங்களை பற்றி விவாதித்துள்ளோம். அது எங்கள் நாட்டில் இருக்கும் அல்லது துபாயில் இருக்கும் மைதானங்களை போலவே இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் ஸ்பின்னர்கள் அதிக உதவியை பெறுவார்கள் என்று கருதுகிறேன். இருப்பினும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதாலேயே நம்பர் ஒன் அணியாக இருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement