தோனி செல்பிஷா? 2011 ஃபைனலில் யுவிக்கு முன் களமிறங்கிய – பின்னணியை பகிர்ந்த முத்தையா முரளிதரன்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 8 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2011 உலக கோப்பையில் சச்சின், சேவாக் போன்ற சீனியர்களையும் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற அனுபவம் கலந்த இளம் வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய தோனி தலைமையில் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்ற இந்தியா நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்து ஃபைனலுக்கு முன்னேறியது.

அதைத்தொடர்ந்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஜெயவர்த்தனே சதத்தால் 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு சேவாக், சச்சின் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க விராட் கோலியும் போராடி அவுட்டானார். அதனால் 114/3 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக நல்ல ஃபார்மில் இருக்கும் யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

செல்பிஷ் தோனி:
ஆனால் அத்தொடர் முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஃபார்மின்றி தவித்த தோனி முன்கூட்டியே களமிறங்கி முக்கிய நேரத்தில் அபாரமாக செயல்பட்டு கௌதம் கம்பீருடன் இணைந்து 91* ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். குறிப்பாக சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 97 ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் கடைசி வரை நின்ற தோனி சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் செய்து 28 வருடங்கள் கழித்து இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவினார்.

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரியின் வர்ணணையில் அவர் அடித்த சிக்சரை இப்போது நினைத்தாலும் ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் புல்லரிக்கும் என்றால் மிகையாகாது. அப்படி முக்கிய நேரத்தில் கேப்டனாக முன்னின்று ஃபினிஷிங் செய்ததால் தோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டாலும் நங்கூரமாக நின்று போராடிய கம்பீர் தான் அதற்கு தகுதியானவர் என இப்போதும் விமர்சனங்கள் காணப்படுகின்றன.

- Advertisement -

அதை விட நல்ல ஃபார்மில் இருக்கும் யுவராஜுக்கு பதிலாக வேண்டுமென்றே பெயர் வாங்குவதற்காக களமிறங்கி சுயநலத்துடன் ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை தோனி வென்றதாக இப்போதும் சலசலப்புகள் காணப்படுகின்றன. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஃபைனலில் கௌதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு கிடைக்க வேண்டிய மொத்த பாராட்டுகளையும் தோனி திருடி விட்டதாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுவதை இன்றும் பார்க்கலாம்.

சொல்லப்போனால் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்களே 10 வருடங்கள் கழித்தும் தோனி மீது அதற்காக அவ்வப்போது வன்மத்தை காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆஃப் ஸ்பின்னரான தமக்கு எதிராக லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேனான யுவராஜ் தடுமாறுவர் என்ற கருதிய தோனி ஐபிஎல் தொடரில் சென்னைக்காக விளையாடிய போது வலைப்பயிற்சியில் எதிர்கொண்டு தம்முடைய பவுலிங்கை நன்கு தெரிந்து வைத்திருந்த காரணத்தால் அந்த சமயத்தில் முன்கூட்டியே களமிறங்கும் முடிவை எடுத்ததாக இலங்கை ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் அதில் எந்த சுயநலமும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மும்பையில் நடந்த 2023 உலகக்கோப்பை வெளியீட்டு விழாவில் பேசியது பின்வருமாறு. “அந்த உலகக் கோப்பையில் அந்த சமயத்தில் 4வது இடத்தில் களமிறங்குவதற்கு சரியான பேட்ஸ்மேனாக இருந்தாலும் யுவராஜ் எனக்கு எதிராக தடுமாறாமல் கச்சிதமாக விளையாட மாட்டார் என்பது எனக்கு தெரியும். அதே சமயம் ஐபிஎல் தொடரில் சென்னைக்காக விளையாடிய போது நான் தோனிக்கு எதிராக வலைப்பயிற்சியில் நிறைய வீசியுள்ளேன். அதன் காரணமாக என்னை எப்படி சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை தோனி அறிவார்”

இதையும் படிங்க:வெ.இ கத்துக்குட்டிய அடிச்சு சாதனை படைக்க அவங்க ஏன் விளையாடனும்? இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்த கவாஸ்கர்

“எனவே அந்த சமயத்தில் எனக்கு எதிராக அவர் விக்கெட் கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் அந்த போட்டியில் நான் விக்கெட் எடுக்காத போதிலும் சிறப்பாகவே பந்து வீசிக் கொண்டிருந்தேன். மேலும் அப்போது பனியின் காரணமாக பந்து அதிகமாக சுழலவில்லை. அந்த நிலையில் எதிர்புறம் கம்பீர் விளையாடிக் கொண்டிருந்த போது விராட் கோலி விக்கெட் விழுந்ததும் தோனி தான் வருவார் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நான் சென்னை அணிக்காக விளையாடியதால் என்னை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்” எனக் கூறினார்.

Advertisement