கடைசிவரை அசைக்கமுடியாமல் திணறிய இந்திய வீரர்கள். சாதித்து காட்டிய தென்னாபிரிக்க தமிழன் – விவரம் இதோ

Muthusamy

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து முடிந்ததுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வீரரான முத்துசாமி இந்திய அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடி அசத்தியுள்ளார்.

அந்த முழு விவரம் யாதெனில் தனது முதல் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலராக பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருந்தாலும் தனது பேட்டிங் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி முதல் இன்னிங்சில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் 106 பந்துகளில் சந்தித்து களத்தில் நின்றார்.

அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் 108 பந்துகள் வரை களத்தில் நின்று 49 ரன்கள் எடுத்து உள்ளார். அவர் விளையாடிய முதல் போட்டியிலேயே தனது பேட்டிங் திறமையை அவர் நிரூபித்துள்ளார். ஏனெனில் ஷமி, அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் விக்கெட்டுகளை தொடர்ந்து நேரத்திலும் இவரது விக்கெட்டை வீழ்த்தமுடியாமல் திணறினார்கள்.

அதே போல பந்துவீச்சில் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தாலும் அது உலகஅளவில் சிறந்த வீரனான கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் அடுத்த போட்டியில் நிச்சயம் தென்னாப்பிரிக்காவில் இடம்பெறுவார் என்று கருதப்படுகிறது.