ஷாகிப் அல் ஹசனை முந்தி வரலாறு படைத்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் – விவரம் இதோ

Mustafizur Rahman
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் சுற்று போட்டியானது நேற்று செப்டம்பர் 24-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 41 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது.

முஸ்தபிசுர் ரஹ்மான் நிகழ்த்திய சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 127 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச அணி சார்பாக விளையாடியிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

அவர் எடுத்த இந்த ஒரு விக்கெட்டின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரரான ஷாகிப் அல் ஹசனை மிஞ்சி மாபெரும் ஒரு சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச அணி சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராக முன்னாள் வீரரான ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று முஸ்தபிசுர் ரஹ்மான் எடுத்த ஒரு விக்கெட் மூலம் அவரது அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : 12 கேட்ச்.. நம்பர் ஒன் இந்தியா மோசமான சாதனை.. இப்படியே போனா கோப்பை கிடையாதென ரசிகர்கள் விளாசல்

முஸ்தபிசுர் ரஹ்மான் நேற்று எடுத்த விக்கெட்டின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 150-வது விக்கெட் கைப்பற்றி வங்கதேச அணி சார்பாக அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும், வங்கதேச அணி சார்பாக முதல் வீரராக 150 விக்கெட்டுகளை எடுத்த வீரராகவும் சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement