12 கேட்ச்.. நம்பர் ஒன் இந்தியா மோசமான சாதனை.. இப்படியே போனா கோப்பை கிடையாதென ரசிகர்கள் விளாசல்

India Catches
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அமீரகத்தில் நடைபெறும் அத்தொடரில் லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அச்சுற்றில் முதல் போட்டியிலேயே பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

அத்துடன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை 7 முறை தோற்கடித்த இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அடுத்ததாக நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 போட்டியிலும் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அடுத்தடுத்த வெற்றிகளால் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

12 கேட்ச் ட்ராப்:

இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது கடைசி சூப்பர் 4 போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்று அடுத்து நடைபெறும் இறுதிப் போட்டியிலும் வென்று 9வது முறையாக ஆசியக் கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது. முன்னதாக இத்தொடரில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் துறைகளில் ஓரளவு சிறப்பாக விளையாடி வருகிறது.

ஆனால் முக்கியமான ஃபீல்டிங் துறையில் ஆரம்பம் முதலே இந்தியா கேட்ச் பிடிப்பதில் திண்டாடி வருகிறது. குறிப்பாக பரம பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஃபர்ஹான் 0 ரன்களில் கொடுத்த கேட்சை அபிஷேக் சர்மா தவற விட்டார். அதைப் பயன்படுத்திய அவர் அரை சதத்தை அடித்து இந்தியாவை துப்பாக்கியால் சுடுவது போல் பேட்டை வைத்து கொண்டாடினார்.

- Advertisement -

மோசமான சாதனை:

அந்தப் போட்டியில் மட்டும் 4 கேட்ச்கள் தவற விட்ட இந்தியா நேற்றைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் 4 கேட்ச்கள் கோட்டை விட்டது. அந்த வகையில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் மட்டும் இந்தியா 12* கேட்ச்களை கோட்டை விட்டுள்ளது. அதனால் 2025 ஆசியக் கோப்பையில் அதிக கேட்ச்சுகள் தவற விட்ட அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2வது இடத்தில் ஹாங்காங் (11 கேட்ச்) உள்ளது.

இதையும் படிங்க: 17 சிக்ஸ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஐந்து 50ஸ்.. ரோஹித்தின் 2 சாதனைகளை உடைத்த அபிஷேக்.. கோலியின் சாதனையும் சமன்

அதையும் தாண்டி எதிரணிகள் பலம் குறைவாக இருப்பதாலும் பேட்டிங், பவுலிங் ஓரளவு நன்றாக இருப்பதாலும் இந்தியா வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டியில் இப்படி கேட்ச்களை தவற விட்டால் இந்தியா ஆசிய கோப்பையை வெல்ல முடியாது என்று இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். எனவே கையில் வெண்ணையை தடவியது போல் செயல்படாமல் இந்திய அணி ஃபீல்டிங் துறையில் முன்னேற வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement