17 சிக்ஸ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஐந்து 50ஸ்.. ரோஹித்தின் 2 சாதனைகளை உடைத்த அபிஷேக்.. கோலியின் சாதனையும் சமன்

Abhishek Sharma
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 24ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை 41 ரன்கள் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 168/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 75, ஹர்திக் பாண்டியா 38, சுப்மன் கில் 29 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹுசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய வங்கதேசத்தை 19.3 ஓவரில் 127 ரன்களுக்கு சுருட்டி எளிதாக வென்ற இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதிகபட்சமாக சாய்ஃப் ஹசன் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, வருண் சக்கரவர்த்தி 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதிரடி அபிஷேக்:

அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அந்த வகையில் இந்தப் போட்டியில் 6 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்ட அவர் 202.70 ஸ்ட்ரைக் ரேட்டில் 75 (37) ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மா 5வது முறையாக 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் 4 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

2 அதிரடி சாதனை:

அத்துடன் இத்தொடரில் இதுவரை 5 போட்டிகளில் அபிஷேக் சர்மா 17 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு பலதரப்பு சர்வதேச டி20 தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார். இதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 15 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: ரொனால்டோவை வைத்து இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் தலைவர்.. டெலீட் செய்து விட்டு தப்பிய பரிதாபம்

மேலும் கடந்தப் போட்டியில் 74 ரன்கள் குவித்த அபிஷேக் இப்போட்டியில் 75 ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஆசிய டி20 கோப்பையில் அடுத்தடுத்த போட்டிகளில் 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2022 ஆசிய டி20 கோப்பையில் விராட் கோலி அந்த சாதனையை படைத்துள்ளார்.

Advertisement