ரொனால்டோவை வைத்து இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் தலைவர்.. டெலீட் செய்து விட்டு தப்பிய பரிதாபம்

Moshin Naqvi
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. அமீரகத்தில் நடைபெறும் அத்தொடரில் லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் வென்ற இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. அடுத்து நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை அடுத்தடுத்து இந்தியா தோற்கடித்தது.

அதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் விளையாடி கோப்பையை வெல்ல இந்தியா தயாராகி வருகிறது. முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். எனவே இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது என்று விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் இந்தியா விளையாடாது என்று விளையாட்டுத்துறை அறிவித்தது.

- Advertisement -

ரொனால்டோவை வைத்து:

அதே சமயம் ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடத் தடையில்லை என்று இந்திய விளையாட்டுத்துறை அறிவித்தது. அதனால் எதிர்ப்புக்கு மத்தியில் விளையாடிய இந்தியா லீக் சுற்றில் பாகிஸ்தானை எளிதாக வென்றது. ஆனால் அந்தப் போட்டியின் முடிவில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தியதற்கு பதிலடியாக பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காமல் புறக்கணித்தது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.

அந்த நிலைமையில் சூப்பர் 4 சுற்றில் அரை சதத்தை பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் இந்தியாவை துப்பாக்கியால் சுடுவது போல் பேட்டை வைத்து கொண்டாடி கிண்டலடித்தார். அதே போல 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான செய்தியை சைகையில் செய்து காட்டிய ஹரிஷ் ரவூப் இந்தியாவை கலாய்த்தார். அதற்கு 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி சிக்ஸர்களால் உங்களைப் பொளந்தது மறந்து விட்டதா? என்று அவருக்கு பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

டெலீட் செய்த பரிதாபம்:

இந்நிலையில் பாகிஸ்தான் வாரியம் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் நக்வி கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை வைத்து இந்தியாவை கிண்டலடித்துள்ளார். அதாவது ரொனால்டோ ஒரு போட்டியில் கோலடித்த பின் எதிரணி விமானம் பறந்து கீழே விழுந்ததைப் போல் கையால் சைகை செய்து கொண்டாடியிருப்பார். அதே போல இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ரெனால்டோ கொண்டாடும் வீடியோவை மோசின் நக்வி ட்விட்டரில் பதிவிட்டு இந்தியாவை கலாய்த்தார்.

இதையும் படிங்க: யுவ்ராஜ் சிங்கின் மேலும் ஒரு சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா.. வேறலெவல் பேட்டிங் – விவரம் இதோ

அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் நீங்கள் இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளலாமா? என்று விமர்சித்தனர். அதனால் அந்த வீடியோ பதிவை டெலீட் செய்துள்ள மோசின் நக்வி விமர்சனங்களிலிருந்து தப்ப முயற்சித்துள்ளார். இருப்பினும் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்து இந்திய ரசிகர்கள் அவரை விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement