வங்கதேச அணிக்கு எதிராக நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது வங்கதேச அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் வரும் இந்திய அணி நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்றது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
யுவ்ராஜ் சிங்கின் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவிக்க பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது 127 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணியானது 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 75 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். அதே வேளையில் அவர் விளையாடிய இந்த இன்னிங்ஸ்சின் மூலம் மேலும் சில சாதனைகளை சர்வதேச டி20 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக அபிஷேக் சர்மாவின் குருவும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான யுவராஜ் சிங்கின் முக்கிய சாதனை ஒன்றினை தற்போது 25 வயதிலேயே அபிஷேக சர்மா முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக 25 பந்துகளுக்கும் குறைவாக அதிகமுறை அரை சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் யுவராஜ் சிங் 4 அரை சதங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தார். ஆனால் அதனை நேற்று வங்கதேச அணிக்கு எதிராக அவர் அரை சதத்தின் மூலம் 25 பந்துகளுக்கும் குறைவாக 5 முறை அரைசதம் அடித்து அந்த பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த போட்டியில் தோற்றாலும் கண்டிப்பா இதை செய்து பைனலுக்கு வருவோம் – வங்கதேச கேப்டன் பேட்டி
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக 25 பந்துகளுக்கும் குறைவாக அதிக முறை 50 ரன்கள் அடித்த வீரர்களாக சூர்யகுமார் யாதவ் 7 முறையும், ரோகித் சர்மா 6 முறையும் அடித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



