100வது டெஸ்டில் தனித்துவ உலக சாதனையை சமன் செய்த ரஹீம்.. வங்கதேச ப்ராட்மேன் வரலாற்று சாதனை

Mushfiqur Rahim
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் வங்கதேசம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி நவம்பர் 19ஆம் தேதி தாக்காவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதுவே வங்கதேசத்தின் மூத்த கிரிக்கெட் வீரர் முஃபிகர் ரஹீமுக்கு 100வது போட்டியாக அமைந்தது.

2005ஆம் ஆண்டு அறிமுகமான அவர் கடந்த 20 வருடங்களாக விளையாடி வங்கதேசம் பதிவு செய்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். அத்துடன் வங்கதேசத்துக்காக 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரராகவும் சாதனை படைத்துள்ள அவர் 99* போட்டிகளில் 6351 ரன்களை குவித்து வங்கதேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அதன் காரணமாக ரஹீமை வங்கதேசத்தின் டான் பிராட்மேன் என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமாகும்.

- Advertisement -

100வது டெஸ்டில் 100:

அப்படிப்பட்ட பெருமை மிகுந்த ரஹீம் இப்போட்டியின் வங்கதேசத்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை படைத்தார். அவருக்கு போட்டித் துவங்குவதற்கு முன்பாக வங்கதேச வாரியத்தின் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. வங்கதேச அணியினர் தங்களுடைய கையொப்பமிட்ட ஜெர்சியை ரஹீமுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

அந்த பாராட்டுகளை ஏற்றுக்கொண்ட ரஹீம் தம்முடைய குடும்பத்தை வரவைத்து குழந்தையை கையில் வைத்துக் கொண்டு நெகிழ்ச்சியுடன் நன்றி உரையாற்றினார். அந்த கொண்டாட்டத்துக்கு மத்தியில் ஆட்டத்தைத் துவங்கிய வங்கதேசத்துக்கு துவக்க வீரர்கள் ஹசன் ஜாய் 34, சாத்மன் இஸ்லாம் 35 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்கள்.

- Advertisement -

உலக சாதனை சமன்:

மிடில் ஆர்டரில் கேப்டன் சான்டோ 8 ரன்னில் அவுட்டான போதிலும் மோனிமுல் ஹைக் – முஷ்பிகர் ரஹீம் ஆகியோர் நங்கூரமாக விளையாடினார்கள். அதில் மோனிமுல் அரை சதத்தை அடித்த 63 ரன்களில் அவுட்டானார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ரஹீம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக தனித்துவமான உலக சாதனையை சமன் செய்தார்.

இதற்கு முன் இங்கிலாந்தின் கோளின் கௌட்ரே (1968), பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் (1989), வெஸ்ட் இண்டீசின் கோர்டன் க்ரீனிட்ஜ் (1990), இங்கிலாந்தின் அலெக் ஸ்டீவர்ட் (2000) ஆகியோரும் அந்த சாதனையைப் படைத்துள்ளனர். பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக் (2005), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (2006), தென்னாப்பிரிக்காவின் கிராம் ஸ்மித் (2012), ஹாசிம் அம்லா (2017), இங்கிலாந்தின் ஜோ ரூட் (2021), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (2022) அகியோருப்பின் அந்த சாதனையைப் படைத்துள்ள ரஹீம் 106 ரன்களை குவித்து அவுட்டானார்.

இதையும் படிங்க: இந்திய அணி இப்படி சரிந்து பாதத்தில்ல.. இதுக்கான காரணத்தை கம்பீர் அவங்ககிட்ட தான் கேட்கனும்.. ஏபிடி பேட்டி

அத்துடன் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மோனிமுல் ஹைக் வரலாற்றுச் சாதனையையும் அவர் (இருவரும் தலா 13) சமன் செய்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் போட்டியில் வங்கதேசம் 400 ரன்களை கடந்து வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது.

Advertisement