இந்திய அணி இப்படி சரிந்து பாதத்தில்ல.. இதுக்கான காரணத்தை கம்பீர் அவங்ககிட்ட தான் கேட்கனும்.. ஏபிடி பேட்டி

AB De Villiers
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அதில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வியைச் சந்தித்தது.

அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான ஆடுகளம் முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட ஆடுகளம் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெளிவுப்படுத்தினார். ஆனால் அந்த ஆடுகளத்தில் இந்திய அணியினர் சிறப்பாக விளையாடாததே தோல்வியைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தது ரசிகர்களைக் கோபமடைய வைத்தது.

- Advertisement -

மோசமான சரிவு:

ஏனெனில் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களே முக்கிய காரணமானது. இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற ஆடுகளத்தை அமைத்து அவமானத் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் விரும்பி வாங்கிய கொல்கத்தா ஆடுகளத்தில் ஏன் தோல்வியைச் சந்தித்தோம்? என்பது பற்றி கௌதம் கம்பீர் இந்திய பேட்ஸ்மேன்களிடம் கேட்க வேண்டுமென ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 4 தோல்விகளை சந்தித்துள்ளது. தம்முடைய கேரியரில் இந்தியா சொந்த மண்ணில் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்து பார்த்ததில்லை என்றும் அவர் கவலைத் தெரிவித்துள்ளார். அதற்கு இந்தியாவை விட வெளிநாட்டு அணிகள் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்வதே காரணமென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

காரணம் என்ன:

“கடந்த 3 – 5 வருடங்களாகவே இந்தியாவில் சுவாரசியமான ட்ரெண்ட் உருவாகி வருகிறது. கண்டிப்பாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது மிகவும் கடினம். ஆனால் கடந்த 3 – 5 வருடங்களாக விஷயங்கள் மாறுகின்றன. இந்தியாவுக்கு சில கவலைகள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 தோல்விகளை சந்தித்துள்ளார்கள் என்பது இதற்கு முன் கேள்விபடாதது. அங்கே என்ன நடக்கிறது? அவர்கள் சுழல் பந்துகளை எதிர்கொள்வதில் மோசமான வீரர்களாகி விட்டார்களா? எனக்கு அப்படித் தோன்றவில்லை”

இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சுப்மன் கில் தவறவிடும் பட்சத்தில் – அவரது இடத்தில் விளையாடப்போவது யார்?

“எதிரணிகள் இந்திய சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதிகமாக தயாராகி வருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொல்கத்தா போட்டி முடிந்து விட்டது. ஆனால் அப்படிப்பட்ட ஆடுகளம் தான் வேண்டுமென்று கேட்டதாக இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சொன்னது சுவாரசியமான கருத்து. இருப்பினும் நாம் விரும்பிய பிட்ச்சில் ஏன் நீங்கள் சிறப்பாக விளையாடவில்லை? என்று அவர் தன்னுடைய வீரர்களிடம் சென்று கேட்கலாம்” என்று கூறினார்.

Advertisement