சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த முஷ்பிகுர் ரஹீம். காரணம் இதுதான் – அவரே வெளியிட்ட பதிவு

Mushfiqur-Rahim
- Advertisement -

பங்களாதேஷ் அணிக்காக கடந்த 2005-ஆம் ஆண்டு அறிமுகமாகிய முஷ்பிகுர் ரஹீம் இதுவரை அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மனாகவும், முன்னணி விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருகிறார். பங்களாதேஷ் அணி மெல்ல மெல்ல ஒரு பெரிய அணியாக உருவெடுக்க முக்கிய காரணமாக பார்க்கப்படும் முஷ்பிகுர் ரஹீம் இன்றளவும் தனது சிறப்பான பேட்டிங்கால் அவர்களது அணிக்கு பெரிய பங்களிப்பினை வழங்கி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் விளையாடியுள்ள அவர் 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 102 டி20 போட்டிகளில் அந்த அணிக்காக இதுவரை பங்கேற்று விளையாடி உள்ளார்.

இந்நிலையில் 35 வயதான அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது : நான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். அதற்கு காரணம் யாதெனில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்துவதற்காகவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கிறேன்.

- Advertisement -

இருந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்குகளில் எனக்கு விளையாட வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதனை ஏற்று விளையாடுவேன். அதை தவிர்த்து வங்கதேச அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இனி கவனம் செலுத்தப்போவதாக தனது கருத்தினை டிவிட்டர் பக்கத்தின் மூலம் அவர் பகிர்ந்தார். அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானது அறிமுக படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக அந்த அணியின் முக்கிய வீரராக டி20 உலக கோப்பைகளில் பங்கேற்று விளையாடி வரும் அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் திடீரென இந்த ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இதுவரை சர்வதேச கிரிக்கெட் டி20 கிரிக்கெட்டில் 102 போட்டிகளில் வங்கதேச அணிக்காக விளையாடியுள்ள அவர் 1500 ரன்கள் குவித்துள்ளார். அது மட்டுமின்றி டி20 போட்டியில் அதிகபட்சமாக 72 ரன்கள் அடித்துள்ளார். பின் வரிசையில் களமிறங்கி பங்களாதேஷ் அணியின் பேட்டிங் ஆர்டரில் மிக முக்கிய வீரராக அந்த அணியை தாங்கி வந்த அவர் பல வெற்றிகளை அந்த அணிக்கு பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அப்டியே அந்த பெயர்கள் லிஸ்டயும் வெளியிடுங்க, தெரிஞ்சுக்கிறோம் – விராட் கோலி மீது கவாஸ்கர் பாய்ச்சல்

பங்களாதேஷ் கிரிக்கெட்டில் விளையாடி வந்த நட்சத்திர வீரரான இவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் ஓய்வினை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி அதிகம் பகிரப்படும் செய்தியாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement