அப்டியே அந்த பெயர்கள் லிஸ்டயும் வெளியிடுங்க, தெரிஞ்சுக்கிறோம் – விராட் கோலி மீது கவாஸ்கர் பாய்ச்சல்

Gavaskar
Advertisement

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனெனில் தனது அபாரமான பேட்டிங் திறமையால் 2010 தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆட்சி செய்த அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்துள்ள அவரை அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் கடுமையாக விமர்சித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ஒரு மாத ஓய்வுக்குப் பின் இந்த ஆசிய கோப்பையில் களமிறங்கிய அவர் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 35 (34) ரன்களையும் ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தடுமாறாமல் 59* (44) ரன்களும் எடுத்தார்.

ஆனாலும் மெதுவாகவும் கத்துகுட்டிக்கு எதிராகவும் எடுத்த அந்த ரன்களை வைத்து பார்முக்கு வந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீண்டும் சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அந்த நிலைமையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்தியா தோற்றாலும் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அற்புதமாக பேட்டிங் செய்த அவர் 60 (44) ரன்கள் குவித்து பழைய பார்முக்கு திரும்பியது போல அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

தோனியால் நெகிழ்ச்சி:
முன்னதாக கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தமது பேட்டிங் பாதித்ததாக உணர்ந்த அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 2021 டி20 உலகக்கோப்பை முதல் கடந்த ஜனவரி வரை படிப்படியாக அனைத்து கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்தார். குறிப்பாக 2014இல் பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறிய இந்தியாவை தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்தும் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வரை வைத்த அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளைப் குவித்து வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்திருந்த போதிலும் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் ராஜினாமா செய்தார்.

Kohli

அந்த நிலைமையில் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நாளன்று தன்னுடைய மொபைல் நம்பர் நிறைய பேரிடம் இருந்தும் யாருமே ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த விராட் கோலி அந்த நாளில் தன்னை வளர்த்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மட்டும் தான் மெசேஜ் அனுப்பியதாக கூறினார். இந்த செய்தி தோனி – கோலி ஆகியோரிடையே இருக்கும் நட்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததால் இந்திய ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் பாய்ச்சல்:
இந்நிலையில் விராட் கோலியின் இந்த கருத்தால் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தபோது யாரெல்லாம் ஆறுதல் மெசேஜ் அனுப்பவில்லை என்ற பட்டியலையும் வெளியிடுமாறு பாய்ந்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Gavaskar-and-Kohli

“அந்த சமயத்தில் இந்திய உடை மாற்றும் அறையில் விராட் கோலிக்கும் இதர வீரர்களுக்கும் எந்த மாதிரியான சூழ்நிலை இருந்தது என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் ஒருவர் (தோனி) மட்டும் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிவித்த விராட் கோலி தொடர்பில் இல்லாதவர்களின் (மெசேஜ் அனுப்பாதவர்கள்) பெயர்களையும் வெளியிட வேண்டும். அதுதான் ஒருவரை தவிர யாருமே அவரை தொடர்பு கொள்ளவில்லை என்று அனைவரும் நினைப்பதை தடுப்பதற்கு நியாயமான வழியாகும்”

- Advertisement -

“விராட் கோலி யாரை குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. அவர் அவர்களுடைய பெயர்களை தெரிவித்தால் நீங்கள் அவரை தொடர்பு கொண்டீர்களா இல்லையா என்று கேட்கலாம். ஆனால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தபோது தோனி மட்டுமே தொடர்பு கொண்டார் என்று கூறியுள்ளதாக கேள்விப்பட்டேன். ஒருவேளை அவர் முன்னாள் வீரர்களை பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தால் அவருடன் விளையாடியவர்களும் அவரை பற்றி தொலைக்காட்சியில் விமர்சித்தவர்களும் நிறைய பேர் உள்ளனர். எனவே மெசேஜ் அனுப்பாத அவர்களின் பெயரை குறிப்பிட்டு நீங்கள் ஏன் எனக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று அவர் நேரடியாக சொல்லலாம்”

இதையும் படிங்க : IND vs PAK : அஷ்வினை ஏன் தெரியுமா சேர்க்கல – இந்தியாவை வெளிப்படையாக கலாய்க்கும் பாக் வீரர், ரசிகர்கள் பதிலடி

“மேலும் விராட் கோலிக்கு என்ன ஆதரவு தேவைப்படுகிறது. கேப்டன் பதவியை துறந்த அவருடைய கேப்டன்ஷிப் பயணம் முடிந்துவிட்டது. தற்போது சாதாரண வீரராக விளையாடும் நீங்கள் உங்களது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 1985இல் நான் கேப்டன்ஷிப் பதவியில் நான் விலகிய போது அணி வீரர்கள் அதைக் கொண்டாடி என்னை கட்டிப்பிடித்து வாழ்த்தினர். அதே போன்றவற்றை பெற்ற உங்களுக்கு அதைவிட வேறு என்ன வேண்டும்” என்று கூறினார்.

Advertisement