அப்பா சொல்லிருக்காரு.. எனக்கு அதான் முக்கியம்.. ஐபிஎல் வாய்ப்பு கிடைக்காததை பற்றி வருத்தமில்ல.. முஷீர் கான் 

Musheer Khan 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக காத்திருக்கின்றனர். இருப்பினும் அதில் சர்பராஸ் கான் மற்றும் முசீர் கான் ஆகிய மும்பையைச் சேர்ந்த 2 இளம் வீரர்கள் எந்த அணிக்காகவும் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. குறிப்பாக 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய முசீர் கான் 360 ரன்கள் அடித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவினார்.

அதன் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் தேர்வான அவர் காலிறுதியில் இரட்டை சதமடித்து, அரையிறுதியில் அரை சதமடித்து, இறுதிப் போட்டியில் சதமடித்தார். அந்த வகையில் அழுத்தமான 3 நாக் அவுட் போட்டிகளிலும் பெரிய ரன்கள் குவித்த அவர் மும்பை 42வது ரஞ்சிக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஃபைனலில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஐபிஎல் வாய்ப்பு:
மொத்தத்தில் ஒரு அண்டர்-19 உலகக் கோப்பையில் 2 சதங்கள் அடித்த 2வது இந்திய வீரர், ரஞ்சிக்கோப்பை இறுதி போட்டியில் இளம் வயதில் ஆட்டநாயகன் விருது வென்ற மும்பை வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த அவருக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வாய்ப்பு கிடைக்காததால் தாம் ஏமாற்றத்தை சந்திக்கவில்லை என்று முசீர் கான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது தான் முக்கியம் என்று தன்னுடைய அப்பா கூறியதாகவும் முஷீர் கான் தெரிவித்துள்ளார். அதை சரியாக செய்தாலே ஐபிஎல் வாய்ப்பு தாமாக கிடைக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் என்னுடைய பெயர் இல்லை. ஆனால் அதற்காக நான் ஏமாற்றமடையவில்லை. என்னை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காகவும் விளையாடுமாறு என்னுடைய தந்தை கூறியுள்ளார்”

- Advertisement -

“எனவே ஐபிஎல் வாய்ப்பு இன்று இல்லாமல் போனாலும் நாளை கிடைக்கும். ஐபிஎல் தொடருக்கு தயாராக எனக்கு மற்றுமொரு வருடம் வாய்ப்பு கிடைத்துள்ளது. டி20 கிரிக்கெட்டையும் அதில் அசத்துவதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதையும் நான் புரிந்துள்ளேன். பேட்டிங் செய்யும் விதம் மற்றும் அர்ப்பணிப்புக்காக நான் என்னுடைய அண்ணன் சர்ஃபாஸ் கானை உத்வேகமாக எடுத்துக் கொள்கிறேன்”

இதையும் படிங்க: அந்த பேங்க் பேலன்ஸ் இருந்தாலும்.. 2024 டி20 உ.கோ வாய்ப்புக்கு விராட் கோலி அதை செஞ்சாகனும்.. டேல் ஸ்டைன்

“எங்களுடைய பேட்டிங் ஸ்டைல் ஒரே மாதிரியாக இருக்கும். ரஞ்சிக்கோப்பை ஃபைனலுக்கு முன்பாக எதைப் பற்றியும் சிந்திக்காமல் சாதாரணமாக விளையாடுமாறு என்னிடம் அவர் சொன்னார். வெளியில் பார்ப்பதற்கு அது சாதாரணமாக தெரிந்தாலும் களத்தில் நாங்கள் அழுத்தத்தை உணர்ந்தோம். இருப்பினும் என்னுடைய திறமை மற்றும் செயல்பாட்டை பின்பற்றுமாறு அவர் என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார்.

Advertisement