அந்த பேங்க் பேலன்ஸ் இருந்தாலும்.. 2024 டி20 உ.கோ வாய்ப்புக்கு விராட் கோலி அதை செஞ்சாகனும்.. டேல் ஸ்டைன்

Dale Styen 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாட மாட்டார் என்ற வதந்திகளைப் போன்ற செய்திகள் வலம் வருகின்றன. அதாவது வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களின் பிட்ச்கள் இறுதியாகவே சற்று ஸ்லோவாக இருக்கும். மறுபுறம் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் சற்று நிதானமாக விளையாடி நன்கு செட்டிலான பின்பு தான் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

எனவே நங்கூரமாக விளையாடக்கூடிய அவருடைய அணுகுமுறை வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் பொருந்தாது என்று தேர்வுக்குழு கவருவதாக செய்திகள் தெரிவிக்கிறது. அதனால் அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் அதற்கு ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஸ்டைன் கருத்து:
இந்நிலையில் விராட் கோலி விளையாடாத சமயத்தில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி அவருடைய இடத்திற்கு போட்டிக்கு வந்துள்ளதாக டேல் ஸ்டைன் கூறியுள்ளார். அதே சமயம் வங்கி கணக்கில் அதிகப்படியான பணம் இருப்பது போல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (4037*) அடித்த வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளதையும் ஸ்டைன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பையிலும் விராட் கோலி விளையாடுவதற்கு தகுதியானவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போது நிறைய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளனர். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி அந்தளவுக்கு இடைவெளி எடுத்துள்ளார்”

- Advertisement -

“ஆனால் உலகக் கோப்பைகளில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்கள் தான் வெற்றியை பெற்றுக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். விராட் கோலி அது போன்றவர்களில் ஒருவர். அவர் ரன்கள் அடித்துள்ளது முக்கியம். நாளின் முடிவில் ஒருவர் வங்கிக் கணக்கில் எவ்வளவு ரன்கள் வைத்துள்ளார் என்பதை நான் பார்ப்பேன். அது தான் விராட் கோலிக்கு சாதகமாக செல்கிறது”

இதையும் படிங்க: 18 பந்தில் 20 ரன்ஸ்.. சோக் செய்த நடப்பு சாம்பியன் மும்பையை வீட்டுக்கு அனுப்பிய ஆர்சிபி.. ஃபைனல் சென்றது எப்படி?

“இந்தியா உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்யும் போது ஏற்கனவே அசத்திய வீரர்களை தேடப் போகிறார்கள். எனவே உலகக்கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி நல்ல ரன்கள் அடித்து தன்னை ஃபார்மில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். ஆனாலும் இந்திய அணியின் தேர்வைப் பொறுத்த வரையில் கண்டிப்பாக விராட் கோலி உலக கோப்பைக்கு செல்வார்” என்று கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் விளையாடாத விராட் கோலி ஐபிஎல் 2024 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement