சாரை பாத்த அப்றம் தான் தெம்பே வந்துச்சு.. சச்சின் முன் அவருடைய சாதனையை உடைத்தது பற்றி முஷீர் கான்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பாராஸ் கான் தம்பி முஷீர் கான் தற்போது சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகிறார். மும்பையைச் சேர்ந்த அவர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் 2 சதங்கள் அடித்து மொத்தம் 360 ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியாவின் பழமை வாய்ந்த உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் பரோடாவுக்கு எதிரான காலிறுதியில் இரட்டை சதமடித்து 203* ரன்கள் விளாசிய அவர் தமிழ்நாட்டுக்கு எதிரான அரையிறுதியில் 55 ரன்கள் அடித்தார். அத்துடன் விதர்பாவுக்கு எதிரான மாபெரும் இறுதிப் போட்டியில் முக்கியமான இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய அவர் சதமடித்து 136 ரன்கள் விளாசி மும்பை 528 ரன்களை இலக்காக நிர்ணயிப்பதற்கு உதவினார்.

- Advertisement -

சச்சின் கொடுத்த உத்வேகம்:
அவருடைய ஆட்டத்தை ஃபைனல் நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேராக பார்த்து பாராட்டினார். சொல்லப்போனால் 19 வயதில் சதமடித்த முசீர் கான் ரஞ்சிக் கோப்பை வரலாற்றின் இறுதிப் போட்டியில் மிகவும் இளம் வயதில் சதமடித்த மும்பை வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 30 வருட சாதனையை உடைத்து புதிய சாதனையும் படைத்தார்.

இதற்கு முன் 1994/95 சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 22 வயதில் சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். இந்நிலையில் இப்போட்டியில் சச்சின் மைதானத்தில் இருந்து தம்முடைய ஆட்டத்தை பார்க்கிறார் என்பது ஆரம்பத்தில் தெரியாது என முஷீர் கான் தெரிவித்துள்ளார். ஆனால் 60 ரன்கள் கடந்ததும் பெரிய திரையில் சச்சினை பார்த்ததும் கிடைத்த பெரிய உத்வேகம் சதமடிக்க உதவியதாகவும் முஷீர் கான் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் சார் இங்கே இருக்கிறார் என்பதை எனக்கு தெரியாது. ஆனால் 60 ரன்களில் நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பெரிய திரையில் அவர் மைதானத்தில் இருப்பதை பார்த்தேன். அப்போதிலிருந்து சச்சின் இன்று என்னுடைய ஆட்டத்தை நேராக பார்க்கிறார் என்ற உத்வேகத்துடன் விளையாடிய நான் அவரை இம்ப்ரெஸ் செய்தேன். ரஞ்சிக்கோப்பை ஃபைனலில் சதமடிக்க வேண்டும் என்பது கனவாகும்”

இதையும் படிங்க: அப்படி சொன்னதால ரிட்டையராக சொன்னாரு.. சுப்மன் கில்லுடன் ஏற்பட்ட ஸ்லெட்ஜிங் பற்றி பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன்

“ஸ்ரேயாஸ் ஐயரும் நானும் நன்றாக தொடர்பு கொண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். நம்மால் முடிந்த வரை ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஸ்ரேயாஸ் பாய் என்னிடம் வலியுறுத்தினார். ரஹானே பாயுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்பில் நிறைய கற்றுக் கொண்டேன். அந்த 2 டெஸ்ட் வீரர்களுடன் விளையாடியது என்னுடைய பெருமையாகும். விதர்பா அணியினர் ரகானேவை அவுட்டாக்க முயற்சித்ததால் எனக்கு பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement