என்னால் நீங்க கஷ்டப்பட வேணாம். என்ன யாரும் புரிஞ்சிக்கல – விஜய் சேதுபதிக்காக உருகிய முரளிதரன்

Vijay-Sethupathy

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை தமிழில் உருவாக்கி ரங்கசாமி இந்த படத்தை இயக்க இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இது குறித்த முதல் போஸ்டர் மற்றும் தலைப்பு என அனைத்தும் வெளியானது. மேலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.

இந்நிலையில் இந்த படத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்காக ஆதரவு அளித்தவர் முரளிதரன் என்பதால் இந்த படத்தில் நடிக்கும் முடிவை கைவிட வேண்டும் என விஜய் சேதுபதிக்கு தமிழ் இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை போன்றோர் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் தனிப்பட்ட முறையிலும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புகள் அதிகமான நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என்று முரளிதரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : எனது வாழ்க்கையை மையமாக கொண்ட 800 திரைப்படத்தை தமிழ்நாட்டில் உள்ள சிலர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இந்த விடயத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். என் மீது உள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக கடுமையான அழுத்தத்தை உணர்வதாக நான் அறிகிறேன். என்னால் தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

muralitharan

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி கலை துறையில் பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு, தேவையற்ற தடைகள் வரும் காலத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இத் திரைப்படத்தில் இருந்து அவரை விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்ததில்லை. அதை அனைத்தும் எதிர்கொண்டு நான் வென்று உள்ளேன்.

- Advertisement -

எனது திரைப்படம் வளரும் தலைமுறைக்கும், எதிர்கால இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் மன உறுதியும் அளிக்கும் என எண்ணியே இத்திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன். ஆனாலும் இத்தனை தடைகளை கடந்து இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். எனது வாழ்க்கை படத்தினை தயாரிக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நான் உறுதுணையாக இருப்பேன் என்று முரளிதரன் கடிதத்தை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.