ஷிகார் தவான் தலைமையிலான இந்தியா அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு நகரில் நடைபெற்று வரும் வேளையில் முரளிதரன் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் சேவாக்கை போன்று விளையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பேட்டியில் முரளிதரன் அவரை அப்படியே அவரது இயல்பான ஆட்டத்திற்கு விடுவது நல்லது என்றும் முரளிதரன் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்
: இந்திய அணி ப்ரித்வி ஷாவை அப்படியே அவரது இயல்பான ஆட்டத்தை விளையாட வைக்க வேண்டும்.
ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகுந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் நன்றாக விளையாடி இருந்தார்.
எனவே அவரது ஆட்டத்தை அவர் போக்கிலேயே விட்டு விட வேண்டும். அப்படி செய்தால் அவர் நிச்சயம் இந்திய அணியின் அடுத்த சேவாக் ஆக மாற வாய்ப்பு உள்ளது. போட்டியின் துவக்கத்திலேயே சேவாக் எவ்வாறு அதிரடியை காட்டினாரோ அதே போன்று நிச்சயமாக ப்ரித்வி ஷாவால் இந்திய அணிக்கு பெரிய அளவில் ரன்களை குவித்து தரமுடியும். எனவே அவரது இயல்பான ஆட்டத்தை இந்திய அணி விளையாட வைக்க வேண்டும் எனவும் முரளிதரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.