வருண் சக்ரவர்த்தி வேணாம். அவருக்கு பதிலா இவரை அணியில் எடுங்க – ஆலோசனை வழங்கிய முரளிதரன்

murali
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு நடைபெறயிருந்த நிலையில் இங்கு பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது அனைத்து அணிகளும் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான அணியை தேர்வு செய்து வருகின்றன.

cup

- Advertisement -

மேலும் 2007 ஆம் ஆண்டு முதலாவது டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணி ஆனது அதன் பிறகு ஒரு முறை கூட டி20 கோப்பையை கைப்பற்றவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை உலகக்கோப்பையை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கும் நிலையில் இம்முறை உலகக் கோப்பையை கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்ற பெருமையை பெற இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போது இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த தொடருக்கான அணியில் தேர்வு எவ்வாறு அமையப் போகிறது என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Varun

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு முன்னதாக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரரான முரளிதரன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் அணித்தேர்வு குறித்து இப்போதைக்கு நாம் எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்த உடன் உடன் தான் அணித் தேர்வு குறித்து நாம் பேச முடியும். என்னை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்திக்கு முன்னதாக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

ஏனெனில் குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தும் திறமை உள்ளவர் என்று பல முறை நிரூபித்துள்ளார். வருன் சக்ரவர்த்தி நல்ல பவுலர்தான் என்றாலும் தற்போது தான் அறிமுகமாகியுள்ளார். அது மட்டுமின்றி அவர் அஜந்தா மெண்டிஸ் அல்லது சுனில் நரேன் அளவிற்கு அவர் இன்னும் வரவில்லை என்று முரளிதரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement