- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் இனி இவருக்கு இந்திய அணியில் இடமில்லை.! முடிவுக்கு வந்த கிரிக்கெட் வாழ்க்கை.!

தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். இந்த தொடரின் ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய விஜய் 2 போட்டிகளிலும் 24 ரன்களை மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியிலே அவர் விளையாடவில்லை.

இந்நிலையில், இத்துடன் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை சந்தேகம் தான் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அவருடைய தற்போதைய வயது 34 எனவே அவரால் ஒரு சில ஆண்டுகளே கிரிக்கெட் விளையாட முடியும். எனவே அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது வெறும் கனவு தான். ஏற்கனவே அணியில் ரகுல் மற்றும் தவான் இருப்பதால் அவருடைய இடம் இனி கேள்விக்குறி தான்.

- Advertisement -

மேலும் அணியில் இப்போது புதிதாக பிரிதிவி ஷா இணைந்துள்ளார். அவருக்கு வயது மிக மிக குறைவு 19 வயது தான் தற்போது ஆகிறது. எனவே, அணியின் எதிர்காலம் கருதி அவர் அணியில் இடம் பெற நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும் அவர் இந்திய அணிக்குள் கால் பதிக்க நிறைய வீரர்கள் அவர்களுடய ஆதரவினை அளிப்பதால், அவர் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார்.

எனவே, இந்திய அணியில் இனி விஜய் ஆடமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சென்ற முறை இங்கிலாந்து சென்ற போது சிறப்பாக செயல்பட்ட விஜய், இந்தமுறை அணியில் இருந்து பாதியில் கழட்டிவிடப்பட்டது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு எடுத்துவந்ததாக கருதப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவந்த வீரருக்கு இனி டெஸ்ட் போட்டிகளில் இடமில்லை என்றே தெரிகிறது.

- Advertisement -
Published by