தினேஷ் கார்த்திக்கை அனைவரும் பாராட்டினர்..ஆனால் முரளிவிஜய் மட்டும் பாராட்டவில்லை – அதற்கு காரணம் இதுதான்.

murali
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

vijay

- Advertisement -

ரோகித்சர்மா அரைசதம் அடித்திருந்த போதிலும்அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்களை குவித்து நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.நேற்றைய தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை இந்திய வீரர்கள் அனைவருமே பாராட்டி வருகின்றனர்.

ஆனால் முரளிவிஜய் மட்டும் தினேஷ் கார்த்திக்கை பாராட்டாமல் டிவிட்டரில் அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.தினேஷ் கார்த்திக், முரளிவிஜய் இருவருக்குமிடையே சொல்லிக்கொள்ளும் படியான உறவு இல்லை.இதற்கு காரணம் தினேஷ் கார்த்திக்கின் மனைவியை தான் முரளிவிஜய் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

Dkarthik

அப்போது முதலே இருவருக்குமிடையே  மிகப்பெரிய  விரிசல் ஏற்பட்டது . அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய டிவீட்டில் கூட தினேஷ் கார்த்திக்கின் பெயரை தவிர்த்துள்ளார்.இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.தினேஷ் கார்த்திக்கின் மனைவி நிகிதா தான் தற்போது முரளிவிஜயின் மனைவி.

Advertisement