தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் சாதிச்சா உங்களுக்கு பொறுக்காதே? சஞ்சய் மஞ்ரேக்கரை தாக்கிய முரளி விஜய் – நடந்தது என்ன

Sanjay Manjrekar Murali Vijay
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா குறைந்தது 3 போட்டிகளை வென்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் எண்ணத்துடன் விளையாடி வருகிறது. அந்த நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். இருப்பினும் அவருடன் தடவலாக செயல்பட்ட ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் முதல் நாள் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 23 ரன்கள் எடுத்து தனது வேலையை கச்சிதமாக செய்து அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த புஜாரா 7, விராட் கோலி 13, சூரியகுமார் யாதவ் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

முரளி விஜய் அதிருப்தி:
ஆனாலும் மறுபுறம் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அபாரமாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா சதமடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். முன்னதாக இந்திய மண்ணில் ஏற்கனவே 7 டெஸ்ட் சதங்களை அடித்திருந்த ரோகித் சர்மா இப்போட்டியிலும் சதமடிப்பாரா என்பதை பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் அடங்கிய வர்ணையாளர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விவாதித்து வந்தனர். அப்போது இந்திய மண்ணில் போராடி அரை சதமடித்து பெற்ற நல்ல தொடக்கத்தை அதிகமுறை சதமாக மாற்றிய இந்திய வீரர்களின் புள்ளி பட்டியல் ஒளிபரப்பப்பட்டது.

அதில் 2010 – 2015 வாக்கில் இந்திய அணியில் நிலையான தொடக்க வீரராக வாய்ப்பு பெற்று நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய தமிழக வீரர் முரளி விஜய் தாம் அடித்த அரை சதங்களில் 9 அரை சதங்களை சதமாக மாற்றி 60 சதவீதத்துடன் இந்திய மண்ணில் அதிக முறை அரை சதங்களை சதமாக மாற்றிய வீரராக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது தெரிய வந்தது. அந்த பட்டியல் (குறைந்தது 10 50+ ஸ்கோர் அடித்த வீரர்களில்):
1. முரளி விஜய் : 60%
2. ரோஹித் சர்மா : 57.1%
3. முகமத் அசாருதீன் : 54.2%
4. பாலி உம்ரிகர் : 53.8%
5. விராட் கோலி : 52.0%

- Advertisement -

ஆனால் அதை பார்த்த சஞ்சய் மஞ்ரேக்கர் அந்த பட்டியலில் முரளி விஜய் முதலிடத்தில் இருப்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாக நேரலையில் பேசினார். அதாவது முரளி விஜய் போன்ற பெரிய அளவில் சாதிக்காத ஒருவர் இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதை எதிர்பார்க்கவில்லை என்ற வகையில் சஞ்சய் மஞ்ரேக்கர் மட்டமாக பேசினார். அதை கவனித்த முரளி விஜய் சில முன்னாள் மும்பை வீரர்கள் எப்போதும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை பாராட்டுவதே கிடையாது என்று தனது ட்விட்டரில் வெளிப்படையாகவே சஞ்சய் மஞ்ரேக்கரை டேக் செய்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இதே போல் மட்டமாக பேசிய சஞ்சய் மஞ்ரேக்கர் தற்போது தாமாக பாராட்டும் அளவுக்கு ரவீந்திர ஜடேஜா தனது செயல்பாடுகளால் பதிலடி கொடுத்து வருகிறார். அதே போல எப்போதுமே தென்னிந்தியாவை சேர்ந்த வீரர்களை பற்றி மும்பையைச் சேர்ந்தவர்களை அவர் பாராட்டுவதில்லை என முரளி விஜய் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs AUS : புதிய வரலாற்று சாதனை படைத்த அஷ்வினை தமிழில் வாழ்த்திய சச்சின் – என்ன சொன்னாருன்னு பாருங்க

அதைப் பார்த்த ரசிகர்கள் இதே போட்டியில் இந்திய மண்ணில் 32 சராசரியை வைத்துள்ள நேதன் லயன் சிறந்த வீரர் என்றும் அவரை விட குறைவான சராசரி வைத்துள்ள தமிழக வீரர் அஷ்வினை சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டவில்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள். அத்துடன் 9 சதங்கள் அடித்துள்ள அவரை விட 12 சதங்கள் அடித்துள்ள நீங்கள் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை என்பதால் சஞ்சய் மஞ்ரேக்கர் போன்றவர்களுக்கு பதிலடி கொடுத்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும் ரசிகர்கள் முரளி விஜய்க்கு பதிலளித்து வருகிறார்கள்.

Advertisement