1999 மாதிரி இந்தியாவை தோற்கடிப்போம்.. சவால் விட்ட அக்தருக்கு.. முனாப் படேல் பதிலடி

- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி 2 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கண்டத்தின் எதிரிகளாக கருதப்படும் இவ்விரு அணிகளும் உலக கோப்பையில் மோதும் போட்டி எப்போதுமே உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக அதிக எதிர்பார்ப்பை கொண்டதாகவும் இருந்து வருகிறது.

அதில் 1992 முதல் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து மோசமான வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மறுபுறம் காலம் காலமாக தோற்காமல் வைத்திருக்கும் கௌவரத்தை இம்முறை சொந்த மண்ணில் இந்தியா காப்பாற்றும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் இருக்கிறது.

- Advertisement -

படேலின் பதிலடி:
அந்த சூழ்நிலையில் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் வென்று மோசமான வரலாற்றை மாற்றுவோம் என்று கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். அதே போல இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்து தோற்கடித்த பின்பு உங்களிடம் செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன் என்று ஷாஹீன் அப்ரிடி இந்திய ரசிகர்களிடம் நேற்று சொன்னதும் வைரலானது.

அதற்கு முன்பாகவே பாகிஸ்தான் தோற்று விடும் என்று இந்திய ஊடகங்கள் சித்தரித்துள்ளதால் இந்திய அணிக்கு தான் அதிக அழுத்தம் இருப்பதாக சோயப் அக்தர் தெரிவித்திருந்தார். எனவே எவ்விதமான அழுத்தமும் இல்லாத பாகிஸ்தான் இம்முறை சாதுமாரியமாக விளையாடி இந்தியாவை தோற்கடிக்கும் என்று அவர் நேற்று பேட்டி கொடுத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 1999 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரை கோல்டன் டக் அவுட்டாக்கிய புகைப்படத்தை தம்முடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள சோயப் அக்தர் இப்போட்டியில் இதே போல செய்தால் அவர்களை (இந்தியாவை) சாந்தமாக வைத்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். அதாவது 1999 கொல்கத்தா போட்டியில் சச்சினை டக் அவுட்டாக்கிய அவர் இந்தியாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார்.

அதே போல செயல்பாடுகளை இப்போட்டியில் பாகிஸ்தான் வெளிப்படுத்தி இந்தியாவை தோற்கடிக்கும் என்று சோயப் அக்தர் சொல்லாமல் சொல்லியுள்ளார். அதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரர் முனாஃப் படேல் 2003 உலகக் கோப்பையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக 2003 உலகக் கோப்பையில் அக்தர் வீசிய பவுன்சர் பந்தில் அசால்டாக சச்சின் சிக்ஸர் அடித்த புகைப்படத்தை பதிலடியாக பதிவிட்டுள்ள முனாப் படேல் போல இம்முறை பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement