ஜாஸ் பட்லரின் அதே ஸ்டைலை பாலோ பண்ணேன். ரஞ்சி தொடரின் இறுதிப்போட்டியில் அசத்திய – இளம்வீரர்

Buttler-and-Jaiswal
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல தொடரான ரஞ்சிக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த ரஞ்சிக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தற்போது மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த 22-ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது முதலில் பேட்டிங் செய்தது.

Ranji Trophy

- Advertisement -

முதல் நாள் ஆட்டத்தை நிதானமாக துவங்கிய மும்பை அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ப்ரித்வி ஷாவுடன் களமிறங்கி விளையாடிய மும்பை அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று விளையாடி 163 பந்துகளை எதிர்கொண்ட வேளையில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 78 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மேலும் அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சிறப்பாக கைகொடுக்க மும்பை அணியானது முதல் இன்னிங்சில் 374 ரன்களை குவித்துள்ளது

வழக்கம்போல் ரஞ்சி கோப்பையில் அசத்திவரும் சர்பராஸ் கான் இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து 134 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து தற்போது மத்தியபிரதேச அணியும் சிறப்பாக விளையாடி வருவதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Yashasvi Jaiswal

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் ஜாஸ் பட்லருடன் விளையாடிய போது தனக்கு கிடைத்த அனுபவம் தான் இந்த ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் நான் சிறப்பாக விளையாட காரணம் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐ.பி.எல் தொடரின் போது ஜாஸ் பட்லரிடம் இருந்து நான் நிறைய பேட்டிங் டிப்ஸ்களை பெற்றுக் கொண்டேன். அவரது ஒவ்வொரு ஆலோசனைகளும் எனக்கு பேட்டிங்கில் பெரிய அளவில் உதவியுள்ளன.

- Advertisement -

சர்வதேச அளவில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த பட்லருடன் ஐபிஎல் போட்டிகளில் களம் இறங்கி விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த வகையில் நான் அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒருமுறை அவர் என்னிடம் பேசிய போது : பந்தை நன்றாக பாருங்கள். பந்து எவ்வாறு வருகிறது என்ற நிலையை புரிந்து கொண்டு அதன் பிறகு நல்ல ஷாட்டை தேர்ந்தெடுத்து விளையாடுங்கள் ரன்கள் தானாக வரும் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை அணியில் பவுலிங்கில் இவரே துருப்புசீட்டாக இருப்பாரு – சஞ்சய் பாங்கர் கருத்து

அப்படி அவர் ஐபிஎல் தொடரின்போது கூறிய சில வார்த்தைகளை நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்ட பிறகு தான் தற்போது ரஞ்சி தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளதாக யாஷஸ்வி ஜெய்ஸ்வல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement