டி20 உலகக்கோப்பை அணியில் பவுலிங்கில் இவரே துருப்புசீட்டாக இருப்பாரு – சஞ்சய் பாங்கர் கருத்து

Bangar
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் அக்டோபர் மாதம் இறுதியில் டி20 உலககோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக ஆயத்தமாகி வரும் அனைத்து அணிகளும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தங்களது அணிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளதால் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து இறுதியான ஒரு அணியை உறுதி செய்யும் தீவிரத்தில் இருக்கின்றனர்.

IND vs RSA Chahal Axar Patel

இந்நிலையில் தற்போது இந்திய அணியிலும் உலகக் கோப்பை தொடருக்கான போட்டியில் பல்வேறு வீரர்கள் இருப்பதால் இந்த உலகக் கோப்பை அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் அசத்தப் போகும் வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த முறை டி20 உலக கோப்பை தொடரில் பும்ராவை காட்டிலும் சாஹல் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அதிகமான வாய்ப்பு உள்ளது.

Chahal

ஏனெனில் உலக கோப்பை தொடரில் பெரிய அளவில் விளையாடாத இவர் தற்போது மிகச்சிறப்பான பார்மில் இருப்பதால் நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்துவார். அதோடு இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருக்கும் அவர் எந்தவித பயமுமின்றி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக துணிச்சலாக பந்துவீசும் குணம் உடையவர் என்பதனால் நிச்சயம் இம்முறை தனது சிறப்பான ஆற்றலை வெளிக் கொணர்வார்.

- Advertisement -

அதோடு கும்ப்ளேவிற்கு பிறகு நான் பார்த்த மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர் இவர்தான் என்பதனால் இவ்வளவு காலம் அவரால் இந்திய அணியில் நீடிக்க முடிகிறது. மேலும் இனி வரும் ஆண்டுகளிலும் அவர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகே இந்திய அணியில் இருந்து விலகுவார் என்பதனால் இம்முறை அவர் இந்த உலக கோப்பையில் அதற்கு உறுதியாக உள்ளார் என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலியின் ஆலோசனையுடன் ஷ்ரேயசை காலி செய்த இந்திய பவுலர், கொண்டாடிய பண்ட் – ஒரே நாளில் 2 சம்பவம் கவனித்தீற்களா

தற்போதுள்ள இந்திய அணி 2 தரமாக பிரிக்கப்பட்டு பல்வேறு வீரர்களை உள்ளடக்கி விளையாடி வருவதால் எவ்வித வீரர்களை உலககோப்பைக்கு தேர்வு செய்வார்கள் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement