விராட் கோலியின் ஆலோசனையுடன் ஷ்ரேயசை காலி செய்த இந்திய பவுலர், கொண்டாடிய பண்ட் – ஒரே நாளில் 2 சம்பவம் கவனித்தீற்களா

Shreyas Iyer Virat Kohli Prasid Krishna County
Advertisement

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக வரும் ஜூலை 1-ஆம் தேதி கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டியில் பங்கேற்கிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற உள்ள 5-வது வெற்றி பெற்று 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா போராட உள்ளது.

INDvsENG

ஆனால் கடந்த வருடம் பலவீனமாக இருந்த இங்கிலாந்து தற்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவாக மாறியுள்ளதால் இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிர அந்த அணி போராட உள்ளது. எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்தப் போட்டியில் அனல் பறக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

பயிற்சி போட்டி:
இந்த போட்டிக்காக தயாராகும் வகையில் கடந்த வாரமே இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய அணியினர் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டி ஜூன் 23-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தபோது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. ஏனெனில் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், செட்டேஸ்வர் புஜரா மற்றும் பிரஸித் கிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக களமிறங்கினார்.

- Advertisement -

இந்தியாவுடன் போட்டி போடும் அளவுக்கு ஒருசில தரமான வீரர்கள் இல்லாத காரணத்தாலும் அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து இந்திய வீரர்களும் களமிறங்கி பயிற்சி எடுக்கும் எண்ணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து இந்திய பாரம்பரிய முறைப்படி இருபுறமும் பெண்கள் நின்று நடனமாடி இந்திய கொடியை பறக்க விட்டு கொடுத்த வரவேற்புக்கு மத்தியில் துவங்கிய இந்த போட்டியில் 21 ரன்கள் எடுத்திருந்த போது தொடக்க வீரர் சுப்மன் கில் ஆட்டமிழந்தார்.

2 சம்பவங்கள்:
அதன்பின் நடந்த 2 சம்பவங்களை இந்திய ரசிகர்களுக்கு வித்தியாசமான வேடிக்கையான அனுபவத்தை கொடுத்தது என்றே கூறலாம். ஏனெனில் விஹாரியுடன் பார்ட்னர்ஷிப் போடுவதற்காக பொறுமையாக பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்திருந்த போது ரோமன் வால்க்ர் வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அதை லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விக்கெட் கீப்பராக விளையாடும் ரிஷப் பண்ட் அந்த அணி வீரர்களுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

- Advertisement -

அவர் அவுட்டானதும் அடுத்த சில ஓவர்களில் தடுமாறிக் கொண்டிருந்த ஹனுமா விஹாரி 3 ரன்களில் நடையைக் கட்டினார். அப்போது விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்தியாவை மீட்டெடுக்கும் முயற்சியில் பேட்டிங் செய்தனர். அந்த சமயத்தில் 19-வது வீசி முடித்த பிரசித் கிருஷ்ணா களத்தில் இருந்த விராட் கோலியிடம் ஒருசில ஆலோசனைகளை பெற்றார்.

அப்போது இந்தியாவுக்காக விளையாடும் இளம் பந்து வீச்சாளரான அவருக்கு ஷ்ரேயஸ் ஐயரை எப்படி அவுட் செய்யலாம் என்பது பற்றிய ஒருசில ஆலோசனைகளை கூறியதாக தெரிகிறது. அதை கச்சிதமாக பயன்படுத்தும் வகையில் அடுத்த ஓவரை அதாவது 21-வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா முதல் பந்திலேயே ஸ்ரேயாஸ் அய்யரை டக் அவுட் செய்து மிரட்டினார்.

- Advertisement -

ஷ்ரேயஸ் ஐயரை எப்படி அவுட் செய்ய வேண்டும் என்பது பற்றி விராட் கோலி தான் அவரிடம் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தற்போது ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இதை பிரசித் கிருஷ்ணா விளையாடும் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் அணி நிர்வாகம் உறுதிப் படுத்தியுள்ளது.

மொத்தத்தில் இந்திய வீரர்களுக்குள் நிகழ்ந்த இந்த 2 நிகழ்வுகளும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இப்படி வித்தியாசமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சற்றுமுன் வரை இந்தியா 191/7 என்ற நிலையில் விராட் கோலி, ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் அவுட்டானதால் தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Advertisement