IPL 2023 : அடுத்த சீசனுக்காக இப்போதே அதுவும் வெளிநாட்டில் தயாராகும் – மும்பை இந்தியன்ஸ் அணி

MI Jaspirt Bumrah
- Advertisement -

ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்று ஜாம்பவான் அணியாக திகழ்ந்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரானது மிகவும் மோசமான சீசனாக அமைந்தது என்றே கூறலாம். ஏனெனில் மிக பலம் வாய்ந்த அணியாக ஐபிஎல் வரலாற்றில் பார்க்கப்பட்ட மும்பை அணி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

Mumbai Indians MI

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு நிச்சயம் மும்பை அணி பழைய பலத்தோடு மீண்டும் வரும் என்று ரோகித் சர்மா கூறியிருந்த வேளையில் தற்போது மும்பை அணி அடுத்த சீசனுக்கான வேலைகளில் தற்போது மும்பரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் சீனியர் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் அவர்களை தவிர்த்து இருக்கும் மற்ற வீரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி உள்ள மும்பை நிர்வாகம் அவர்களை இங்கிலாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்று மூன்று வாரங்கள் தங்கி பயிற்சி போட்டிகளில் விளையாட வைத்து வருகிறது.

MI Mumbai Indians

அதோடு இந்த மூன்று வார பயிற்சிக்கு பிறகு இடையிடையே மும்பையிலும் முகாம் அமைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிகிறது. அடுத்து சீசனில் நிச்சயம் இந்தி மும்பை இந்தியன்ஸ் அணி பலமான அணியாக மீண்டும் வந்து கோப்பையை கைப்பற்றுவதற்காக தற்போது இளம் வீரர்களை வைத்து இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த பயிற்சி போட்டிகளில் சீனியர் வீரர்களை தவிர்த்து மற்ற இளம் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவருமே இங்கிலாந்துக்கு அணி வீரர்களுடன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலி தலைமையில் நான் ஆடியிருந்தா 3 உலககோப்பை வாங்கியிருப்போம் – இந்திய வீரரின் உருட்டு

அதோடு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள உள்ளூர் கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement