MI vs RCB : ஐ.பி.எல் வரலாற்றில் சேஸிங்கில் யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்திய – மும்பை இந்தியன்ஸ் அணி

MI
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

RCB vs MI Josh hazlewood Nehal Wathera

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சேசிங்கில் யாரும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 16.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

SKY and Nehal

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி படைத்த சாதனை யாதெனில் : 200 ரன்கள் மற்றும் அதற்குமேல் இருக்கும் இலக்கினை துரத்தும் போது அதிக பந்துகளை மிச்சம் வைத்து வெற்றி பெற்ற அணியாக மும்பை அணி சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் 200 ரன்களை துரத்திய மும்பை அணியானது 16.3 ஓவர்களிலேயே வெற்றி பெற்றதால் 21 பந்துகள் மீதம் வைத்து 200 ரன்கள் என்று இலக்கினை வெற்றிகரமாக அடித்துள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : ஆஸ்கர் விருது வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த குழுவை நேரில் பாராட்டி – பரிசளித்த தல தோனி

இதற்கு முன்னதாக 200 ரன்னுக்கு மேல் இலக்கு இருந்து 15 பந்துகள் மீதம் வைத்து டெல்லி அணி பெற்ற வெற்றியே சேஸிங்கில் அதிக பந்து வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையை தற்போது மும்பை அணி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement