IPL 2023 : எல்லா புகழும் சூரியாவுக்கே, கடப்பாரை பேட்டிங்கால் மிரட்டும் மும்பை – வேறு எந்த அணியும் படைக்காத மாஸ் வரலாற்று சாதனை

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 7வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 218 ரன்களை குவித்தது. அந்த அணிக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரர்கள் இஷான் கிசான் 31 (20) ரன்களும் ரோஹித் சர்மா 29 (18) ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் விஸ்ணு வினோத் 30 (20) ரன்கள் எடுத்தார்.

MI vs GT Rashid Khan

- Advertisement -

ஆனால் அவர்கள் அனைவரையும் விட களமிறங்கிய முதல் பந்திலிருந்தே குஜராத் பவுலர்களை தனது ஸ்டைலில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் வரலாற்றில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து 11 பவுண்டரி 6 சிக்சருடன் 103* (49) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 219 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சகா 2, சுப்மன் கில் 6, ஹர்திக் பாண்டியா 4, விஜய் சங்கர் 29, அபினவ் மனோகர் 1, ராகுல் திவாடியா 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

மும்பையின் கடப்பாரை பேட்டிங்:
அதனால் டேவிட் மில்லர் 41 (26) ரன்களும் கடைசி நேரத்தில் தனி ஒருவனாக மும்பை பவுலர்களை பந்தாடிய ரசித் கான் 3 பவுண்டரி 10 சிக்சருடன் 79* (32) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 191/8 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் போராடி தோற்றது. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

Suryakumar Yadav 103

ஐபிஎல் தொடரில் இதே போல அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்காக தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வித்தியாசமான ஷாட்களை அடித்து பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மனாக ஜொலித்து வருகிறார். இருப்பினும் சமீபத்திய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான அவர் இத்தொடரிலும் ஆரம்பகட்ட போட்டிகளில் சுமாராக செயல்பட்டு முதல் 5 போட்டிகளில் வெறும் 66 (47) ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

ஆனால் அதன் பின் ஃபார்முக்கு திரும்பி முன்பை விட முரட்டுத்தனமாக அடித்து வரும் அவர் அடுத்த 7 போட்டிகளில் 413 (214) ரன்களை விளாசி புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் திணறிய மும்பையை டாப் 4 இடத்திற்குள் நுழைய முக்கிய பங்காற்றினார். அவருடன் திலக் வர்மா, இஷான் கிசான், கேமரூன் கிரீன் உள்ளிட்ட இதர வீரர்களும் அதிரடி காட்டுவதால் பழைய கடப்பாரை பேட்டிங்கை வெளிப்படுத்தும் மும்பை ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 3 போட்டிகளில் 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாகவும் 200+ இலக்கை அதிவேகமாக சேசிங் செய்த அணியாகவும் சமீபத்தில் சாதனை படைத்தது.

இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிராக 201/6, ராஜஸ்தானுக்கு எதிராக 214/4, பஞ்சாப்புக்கு எதிராக 216/4, பெங்களூருவுக்கு எதிராக 200/4, நேற்று குஜராத்துக்கு எதிராக 218/5 என கடைசியாக மும்பை களமிறங்கிய 6 போட்டிகளில் 5இல் 200+ ரன்களை அடித்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 5 முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த முதல் அணி என்ற வேற எந்த அணியும் படைக்காத மற்றுமொரு மாஸ் சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.

இதையும் படிங்க:DC vs PBKS : முதல் 10 ஓவரில் அம்பியாக அடுத்த 10 ஓவரில் அந்நியனாக மாறி தனி ஒருவனாக – பஞ்சாப்பை காப்பாற்றிய இளம் வீரர்

அப்படி வரலாற்று சாதனை படைத்த மும்பையின் இந்த சாதனைக்கான எல்லா புகழும் அந்த 5 போட்டிகளில் இதர வீரர்கள் பங்காற்றியிருந்தாலும் 57, 55, 66, 83, 103* என பெரிய ரன்களை குவித்த சூரியகுமாரை சேரும் என்றே சொல்லலாம்.

Advertisement