மும்பை இந்தியன்ஸ் ரசிகரா நீங்கள் ? அப்போ இந்த செய்தி உங்களுக்கு ஹேப்பி நியூஸ் தான் – வைரலாகும் புகைப்படம்

ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ளது. ஐபிஎல் துவங்கும் தேதி வெளியானதிலிருந்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். கடந்த 5 மாதத்திற்கு மேலாக சர்வதேச அளவில் பெரிய கிரிக்கெட் தொடர் நடத்தப்படாமல் இருக்கும் இச்சமயத்தில் ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இதனால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ipl

மேலும் இந்த தொடருக்கான 8 அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு தற்போது பயிற்சியையும் துவங்கியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டும் இன்னும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் நீடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணியில் இரு வீரர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக சிஎஸ்கே அணியை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்துமே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி இந்த முறையும் கோப்பையை கைப்பற்றுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இந்த தொடருக்காக தங்கள் காத்திருப்பதாக ஹர்டிக் பண்டியா, ரோகித் சர்மா போன்ற மும்பை வீரர்கள் சமூகவலைதளத்தில் தங்களது எதிர்பார்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மேலும் மும்பை அணியின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதத்தில் சில தினங்களுக்கு முன்னர் முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அப்டேட் ஒன்றை ரசிகர்களுக்காக பதிவிட்டு உள்ளது.

- Advertisement -

அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புத்தம் புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முன்பு அடர் நீல நிறத்தில் இருந்த சீருடை தற்போது ஆங்காங்கே சற்று வெளிர் நிறத்தில் இருக்கிறது. மேலும் பார்ப்பதற்கு சிறிய மாறுதலுடன் ஆனால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த ஜெர்சி மும்பை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.