ஐபிஎல் 2025: மீண்டும் கேப்டனாக பாண்டியா.. ரோஹித், பும்ரா உட்பட மும்பை தக்க வைத்த டாப் 5 வீரர்களின் லிஸ்ட்

Mumbai
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் வீரராக ஜஸ்ப்ரித் பும்ராவை 18 கோடி மிகப்பெரிய தொகைக்கு தக்க வைத்துள்ளது.

மும்பை அணிக்காக 2015 முதல் விளையாடி வரும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போது உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக அசத்தி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனாலயே அவரை மும்பை தங்களுடைய முதல் வீரராக தக்க வைத்துள்ளது.

- Advertisement -

கேப்டனாக பாண்டியா:

அடுத்ததாக இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக அறியப்படும் சூரியகுமார் யாதவ் 16.35 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். எப்படி போட்டாலும் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கக்கூடிய அவர் தற்போது இந்தியாவின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் மும்பை அணியின் கேப்டனாக அவர் அடுத்த வருடம் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதை செய்யாத மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை 16.35 கோடிக்கு மீண்டும் தக்க வைத்து கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது. கடந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அதற்கு மும்பை ரசிகர்கள் மட்டுமே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

மும்பை வீரர்கள்:

அதற்கு மத்தியில் பாண்டியா தலைமையில் சுமாராக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அப்படியிருந்தும் பாண்டியாவை மீண்டும் கேப்டனாக அறிவித்துள்ள மும்பை ரோகித் சர்மாவை 16.30 கோடிக்கு தக்க வைத்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று கொடுத்த அவருடைய அனுபவத்தை மதித்து மீண்டும் மும்பை நிர்வாகம் இந்த முடிவெடுத்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: 65 கோடி.. மீண்டும் தல தோனி.. சிஎஸ்கே தக்க வைத்த டாப் 5 வீரர்களின் பட்டியல் இதோ

சொல்லப்போனால் கேப்டனாக கழற்றி விட்டதற்கே மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது மொத்தமாக கழற்றி விட்டால் அதிகமாகும் என்று கருதியே மும்பை இந்த முடிவு எடுத்துள்ளது என்று சொல்லலாம். இறுதியாக இளம் வீரர் திலக் வர்மாவை மும்பை 8 கோடிக்கு தக்க வைத்துள்ளது. இந்த 5 வீரர்களை தக்க வைப்பதற்காக மும்பை மொத்தம் 75 கோடிகளை செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement