ஐபிஎல் 2025: 65 கோடி.. மீண்டும் தல தோனி.. சிஎஸ்கே தக்க வைத்த டாப் 5 வீரர்களின் பட்டியல் இதோ

CSK
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டுள்ளன. அதில் வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்களுடைய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

தற்போது 42 வயதாகும் அவர் அதிகபட்சமாக இன்னும் ஓரிரு வருடங்கள் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவரை அன்கேப்ட் வீரராக தக்க வைக்க பிசிசிஐயிடம் சிஎஸ்கே நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்றுக் கொண்டு பிசிசிஐ மீண்டும் 2021இல் நீக்கப்பட்ட அந்த விதிமுறையை கொண்டு வந்தது.

- Advertisement -

மீண்டும் தல தோனி:

தற்போது அதை பயன்படுத்தி எம்எஸ் தோனியை 4 கோடிக்கு சென்னை அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது. குறிப்பாக 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்றார். எனவே ஓய்விலிருந்து 5 வருடங்கள் முடிந்து விட்டதால் அவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதி சென்னை 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.

அவருடன் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக பேட்டிங் செய்து வரும் அவர் 2021 ஐபிஎல் கோப்பையை சென்னை வெல்ல ஆரஞ்சு தொப்பியை முக்கிய பங்காற்றினார். அதனால் தோனியின் நம்பிக்கையை பெற்று வருங்கால கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் மீண்டும் 18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

சென்னை வீரர்கள்:

அவருக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து குட்டி மலிங்கா என்று சிஎஸ்கே ரசிகர்களால் பாராட்டப்படும் இலங்கை வீரர் மதிசா பதிரனா 13 கோடிக்கு மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார். 2023 ஐபிஎல் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இளம் வீரராக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5 – 0ன்னு குறைச்சு எடை போட்ட.. இந்தியாவுக்கு இந்த வலியை கொடுத்துட்டு போவோம்.. நியூஸிலாந்து வீரர் பேட்டி

இறுதியாக சிவம் துபே 12 கோடிகளுக்கு சிஎஸ்கே அணியால் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே அதிரடியாக பேட்டிங் செய்து சிக்சர்களைப் பறக்க விடும் அவர் 2023 ஐபிஎல் கோப்பையை சென்னை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் மீண்டும் அவர் தக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த 5 வீரர்களை தக்க வைப்பதற்காக சென்னை மொத்தம் 65 கோடிகளை செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement