ஐபிஎல் 2023 சீசனில் வெறித்தனமான கம்பேக் கொடுக்க இப்போதே மும்பை போட்ட மாஸ்டர் பிளான், முழுவிவரம் இதோ

MI Mumbai Indians
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் மே 29 வரை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்றதால் கோப்பையை வெல்ல கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் கேப்டன்ஷிப் முன் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதேபோல் 14 வருடங்கள் கழித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்திய ராஜஸ்தான், பெங்களூரு, லக்னோ போன்ற அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று பாராட்டுகளைப் பெற்றன.

Mumbai Indians MI

ஆனால் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பையும் சென்னையும் ஆரம்பம் முதல் கடைசி வரை சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சரித்திரம் படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரிய அவமானத்திற்கு உள்ளானது. இத்தனைக்கும் 5 கோப்பைகளை வாங்கி கொடுத்த ரோகித் சர்மா தலைமை தாங்கிய அந்த அணிக்கு சென்னை உள்ளிட்ட எஞ்சிய 9 அணிகளுக்கு கிடைக்காத சொந்த மண்ணில் விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

தவறு எங்கே:
பிப்ரவரியில் நடைபெற்ற ஏலத்தின் போது ஹர்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட் போன்ற தரமான வீரர்களை மீண்டும் வாங்காமல் விட்ட அந்த அணி நிர்வாகம் இஷான் கிசான் என்ற ஒருவருக்காக மட்டும் 15 கோடிகளை வாரி இறைத்தால் மேலும் ஒருசில தரமான வீரர்களை வாங்க முடியாமல் போனது. மேலும் விளையாட மாட்டார் என தெரிந்தும் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு இலவச சம்பளமாக வாங்கியது போன்ற அம்சங்கள் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. அத்துடன் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இஷான் கிசனுடன் ரோகித் சர்மா, கைரன் பொல்லார்ட் போன்ற முக்கிய வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறியதும் சூர்யகுமார் யாதவ் காயத்தால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனதும் அந்த அணிக்கு களத்தில் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Mi Mumbai

மேலும் ஒரு காலத்தில் லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட் என மிரட்டிய அந்த அணியின் பந்துவீச்சில் இந்த வருடம் பும்ராவை தவிர எஞ்சிய அனைவரும் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையாக மாறி வெற்றிகளை எதிரணிக்கு பரிசளித்தார்கள். மொத்தத்தில் இந்த வருடம் மொத்தமாக சொதப்பிய அந்த அணி தோல்விகளில் இருந்து நிறைய பாடங்களை எடுத்துக் கொண்டு அடுத்த வருடம் கோப்பையை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

- Advertisement -

முன்கூட்டியே பயிற்சி:
இந்நிலையில் இந்த வருடம் ஏற்பட்ட படுதோல்வியை சரிசெய்ய அடுத்த வருடம் உடனடியாக கோப்பையை வென்று வெறித்தனமான கம்பேக் கொடுப்பதற்கான வேலைகளை இப்போதே மும்பை அணி நிர்வாகம் துவக்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக அடுத்த வருடம் விளையாட போகும் இளம் வீரர்களை இங்கிலாந்துக்கு பிரத்தியேகமாக அழைத்துச் செல்லும் அந்த நிர்வாகம் அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் அணிகளுடன் 3 வாரங்கள் களமிறங்கி பயிற்சி எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதை தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே மேற்பார்வையிடுவார் என்று தெரிவித்துள்ள அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு.

MI vs LSG

“இந்த பயணம் வணிக ரீதியான பயணமல்ல. இந்த போட்டிகள் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும். அதற்காக டிக்கெட்டுகள் எதுவும் விற்கப்படப்போவதில்லை. அந்த வகையில் இந்த பயணம் வருமானத்தை சார்ந்தது இல்லை என்பதால் பிசிசிஐயிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இதில் தேசிய அணிகளுக்கு தொடர்பில்லாத பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் பங்கேற்காத வீரர்களை மட்டுமே அழைத்துச் செல்ல உள்ளோம்”

- Advertisement -

“திலக் வர்மா, குமார் கார்த்திகேயா, ராமந்தீப் சிங், ரித்திக் சாகின் போன்ற வீரர்கள் டாப் டி20 கிளப் அணிகளுக்கு எதிராக விளையாடி இங்கிலாந்து போன்ற பல்வேறு கால சூழ்நிலைகளை தெரிந்து கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் அர்ஜுன் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவின் தேவால்டு ப்ரேவிஸ் போன்ற வீரர்களும் இடம் பெற உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க, அவமானத்தால் முக்கிய பதவியை ராஜினாமா செய்த மைக்கேல் வாகன் – என்ன நடந்தது?

ஐபிஎல் 2023 தொடருக்கு இன்னும் 9 மாதங்களுக்கு மேல் உள்ளதால் எஞ்சிய அணிகள் அமைதியாக இருக்கின்றன. ஆனால் இந்த வருடம் சந்தித்த படு தோல்வியால் உறங்காத மும்பை இப்படி ஆரம்பத்திலேயே பயிற்சியை துவக்கியுள்ளது ரசிகர்கள் மற்றும் எதிரணியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement