கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க, அவமானத்தால் முக்கிய பதவியை ராஜினாமா செய்த மைக்கேல் வாகன் – என்ன நடந்தது?

Vaughan
- Advertisement -

உலகில் மனிதர்களாக பிறந்தவர்கள் ஆண், பெண் என்ற வித்தியாசத்தைத் தவிர அனைவரும் சமம் என்பதே நிதர்சனம். ஆனால் கடந்த நூற்றாண்டில் வெள்ளையாக பிறந்தவர்கள் தாங்கள் தான் பெரியவர்கள் என்ற கர்வத்துடன் கருப்பாக பிறந்தவர்களை ஏளனம் செய்வதும், கிண்டலடிப்பதும், அடிமைப்படுத்துவதும் என ஏராளமான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த ஒடுக்கத்தை பல தலைவர்கள் எதிர்த்ததால் இந்த நூற்றாண்டில் இனவெறி சச்சரவுகள் குறைந்து அனைவரும் சமம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த நவீன யுகத்தில் கிரிக்கெட் உட்பட அனைத்து துறைகளிலும் அரசல் புரசலாக இன்னும் இனவெறி செயல்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த வருடம் சிட்னியில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர் சிராஜை அந்நாட்டை சேர்ந்த சிலர் இனவெறி மற்றும் தோற்றத்தை வைத்து கிண்டலடித்தது பெரிய சர்ச்சையானது. அதைவிட இங்கிலாந்தில் காலம் காலமாக நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வீரர்கள் கடந்த பல வருடங்களாக இனவெறி கிண்டல்களுக்கு உள்ளாவதாக கடந்த வருடம் பகிரங்க குற்றச்சாட்டு எழுந்தது.

- Advertisement -

அதை ஆசிய கண்டத்தில் பிறந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து கிரிக்கெட்டில் விளையாடி வரும் அஷீம் ரபிக் எனும் வீரர் கடந்த வருடம் அம்பலப்படுத்தியதால் லண்டனில் அதற்காக பிரத்யேகமாக நடைபெற்ற திறந்தவெளி நீதிமன்றத்தில் தமக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் மல்க அவர் தெரிவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

நிறைவெறி மைக்கேல் வாகன்:
அதிலும் கடந்த 2009இல் யோர்க்ஷைர் அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய போது அதே அணிக்காக விளையாடிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சக வீரர்களிடம் “உங்களை போன்ற பலர் இங்கே வந்து விட்டனர், இதற்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும்” என்று நிறைவெறி அடிப்படையில் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார். அந்த தகவல் ஒட்டுமொத்த உலகையே திருப்பிப்போட்ட நிலையில் அதற்கு தண்டனையாக யோக்ஷைர் கிரிக்கெட் கிளப் நிர்வாகத்துக்கு அபராதமும் சம்மந்தப்பட்ட 16 நிர்வாகிகளுக்கும் 7 வீரர்களுக்கும் அதிரடியான தடையும் விதிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மைக்கேல் வாகன் மொத்தமாக மறுத்தார். இருப்பினும் அஷீம் ரபிக் கூறிய கருத்துக்கள் நிரூபணமானதால் யோர்க்சைர் கவுண்டி கிரிக்கெட் வர்ணனையாளர் பட்டியலில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த நிகழ்வு நடந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மீண்டும் அந்த தடையைத் தாண்டிய மைக்கெல் வாகன் சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் தொடரின் வாயிலாக மீண்டும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான பிபிசி தொலைக்காட்சியின் வாயிலாக வர்ணனை செய்யும் வேலைகளை தொடங்கினார்.

கடும் எதிர்ப்பு:
ஆனால் அந்த முடிவு பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிருப்தி அலையை ஏற்படுத்தி விமர்சனத்தை உண்டாக்கியது. அதனால் விமர்சனத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளான மைக்கல் வாகன் இம்முறை தாமாக வர்ணனையாளர் செய்வதில் இருந்து விலகுவதாக தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தன் மீதான விமர்சனங்கள் தனது குடும்பத்தை பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது பற்றி கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“பல சந்தர்ப்பங்களில், யோர்க்ஷைர் தொடர்பான பிரச்சனைகளில் எனது கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். களத்திற்கு வெளியே நடந்த விஷயங்களைப் பற்றி களத்தில் போட்டி நடக்கும்போது வர்ணனை செய்யும்போது கவனம் செலுத்துவது எப்போதும் வருந்ததக்கது. எனவே தற்போது உலா வரும் விமர்சனங்களை கருத்தில் கொண்டு பிபிசி உடனான எனது பணியிலிருந்து தற்போதைக்கு விலக முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார். இதை அடுத்து வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்டு 5-வது போட்டியின் போது அவர் வர்ணனையாளராக செயல்பட மாட்டார் என்பது தெரியவருகிறது.

இதையும் படிங்க : அயர்லாந்து அணிக்கெதிரான இந்த அதிரடியான சதத்திற்கு இதுவே காரணம் – தொடர்நாயகன் தீபக் ஹூடா பேட்டி

கொஞ்ச நஞ்ச பேச்சு:
பொதுவாகவே எப்போதும் இங்கிலாந்து தான் பெரியது என்ற வகையில் எதிரணிகளை கிண்டலடிக்கும் வகையில் மைக்கேல் வாகன் பேசுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இந்தியாவையும் இந்திய வீரர்களையும் கடந்த காலங்களில் அவர் பலமுறை கிண்டலடிப்பது போல் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த நிலைமையில் இந்த செய்தியை அறிந்த இந்திய ரசிகர்கள் “கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க” என்று அவருக்கு தற்போது சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement