அயர்லாந்து அணிக்கெதிரான இந்த அதிரடியான சதத்திற்கு இதுவே காரணம் – தொடர்நாயகன் தீபக் ஹூடா பேட்டி

Deepak-Hooda
Advertisement

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று டப்ளின் நகரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தீபக் ஹூடாவின் அபாரமான ஆட்டம் காரணமாக 225 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணியானது 221 ரன்கள் குவித்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

Deepak Hooda 1

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர் இஷான் கிஷன் 5 பந்துகளை சந்தித்த நிலையில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே போட்டியின் ஆரம்பத்திலேயே இந்திய அணி சரிவை சந்தித்தது. அதன் பின்னர் சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 57 பந்துகளில் 9 பவுண்டரி 6 சிக்சர் என 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவரது இந்த அபாரமான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோன்று முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்ற தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டம் குறித்தும், அவர் அடித்த சதம் குறித்தும் பேசியிருந்த தீபக் ஹூடா கூறுகையில் :

Deepak Hooda 104

நான் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டேன். அதனை தொடர்ந்து அதே பார்மை சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர விரும்பினேன். அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன். இந்த தொடரில் நான் மிகவும் அதிரடியாக விளையாட நினைத்தேன். அதற்கு ஏற்றார் போல் எனக்கு பேட்டிங் ஆர்டரிலும் முன்கூட்டியே வாய்ப்பு கிடைத்ததால் பேட்டிங்கில் செட்டிலாக நிறைய நேரம் கிடைத்தது.

- Advertisement -

அதனால் போட்டியின் சூழ்நிலை விரைவிலேயே கணித்து அதிரடியாக விளையாடினேன். சஞ்சு சாம்சன் எனக்கு சிறுவயது நண்பர். நாங்கள் இருவருமே 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியிலிருந்து ஒன்றாக விளையாடி வருகிறோம். எனவே அவருடன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. அயர்லாந்து நாட்டில் எங்களுக்கு கிடைத்த ரசிகர்களின் சப்போர்ட் என்பதும் அபரிவிதமான ஒன்று.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி வைத்திருந்த மாபெரும் சாதனையை முறியடித்த பாபர் அசாம் – குவியும் வாழ்த்துக்கள்

இந்தியாவில் இருந்து வெளியில் நாங்கள் விளையாடியது போன்ற உணர்வே தெரியவில்லை அந்த அளவிற்கு ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கினர் என்று தீபக் ஹூடா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்த 4 ஆவது வீரர் என்ற சாதனையையும் தீபக் ஹூடா நேற்று படைத்தார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement